செய்திகள் மலேசியா
69ஆவது தேசிய தின கொண்டாட்டம்: பேரரசர், பேரரசியார் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்
புத்ராஜெயா:
நாட்டின் 69ஆவது தேசிய தினம் இன்று ஆகஸ்ட் 31ஆம் தேதி புத்ராஜெயா சதுக்கத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்த தேசிய தின கொண்டாட்டத்தில் பேரரசர் சுல்தான் இப்ராஹிம், பேரரசியார் ராஜா ஸரித் சோஃபியா, பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், மடானி அமைச்சரவையைச் சேர்ந்த அமைச்சர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
காலை 8 மணி தொடங்கி தற்போது வரை புத்ராஜெயா சதுக்கத்தில் நடைபெற்று வரும் இந்த கொண்டாட்டத்தை நாட்டு மக்கள் கண்டு களிக்கின்றனர்,
அரச மலேசிய வான்படை சாகசங்கள், பாரம்பரிய நடனங்கள், ஒவ்வொரு அமைச்சுகளின் அணிவகுப்புகள் என அனைத்தும் ஒருசேர சிறப்பாக நடைபெற்றன.
நெகாராக்கூ, மற்றும் தேசிய கோட்பாடு முழக்கங்களுடன் தேசிய தின கொண்டாட்டம் தொடங்கியது
கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி 1957 ஆங்கிலேயரிடமிருந்து மலாயா மெர்டேக்கா பெற்றது. பிறகு 1963ஆம் ஆண்டு சபா, சரவாக் இரு மாநிலங்களை இணைத்து மலேசியா என்று உருவாக்கம் கண்டது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 31, 2026, 11:17 am
2026 தேசிய தினக் கொண்டாட்டம் வெற்றி: பிரதமர், துணைப்பிரதமர் பாராட்டு
August 31, 2026, 10:56 am
மலேசிய மரத்தோனில் ஹோனரின் மனித ரோபோ 10 கி.மீ. தூரத்தை நிறைவு செய்தது
August 31, 2026, 10:53 am
இனவெறி, அடக்குமுறையை நிராகரிப்போம்; ஊழலிலிருந்து விடுபடுவோம்: பிரதமர்
August 31, 2026, 10:02 am
69ஆவது தேசிய தினக் கொண்டாட்டம்: பேரரசர், பேரரசியார் நாட்டு மக்களுக்கு வாழ்த்து
August 30, 2026, 10:32 pm
