செய்திகள் மலேசியா
மலேசிய மரத்தோனில் ஹோனரின் மனித ரோபோ 10 கி.மீ. தூரத்தை நிறைவு செய்தது
கோலாலம்பூர்:
2026 மலேசிய மாரத்தான் நிகழ்வில், மனித ஓட்டப்பந்தய வீரர்கள் ஓட்டத்தை நிறைவு செய்தது மட்டுமல்லாமல், ஹோனர் மனித உருவ ரோபோவும் சீனாவிற்கு வெளியே தனது முதல் அனைத்துலக அறிமுகத்தை மேற்கொண்டது.
ஹோனர் ரோபோடிக்ஸ் டி1 என்ற அந்த ரோபோ, வெப்பமான வானிலை, அதிக ஈரப்பதத்திலும் 10 கி.மீ. தூரத்தை வெற்றிகரமாக நிறைவுசெய்தது.
இதன் மூலம், நிஜ உலகச் சூழலில் மனித உருவ ரோபோ தொழில்நுட்பத்தின் திறன்களையும் நீடித்து உழைக்கும் தன்மையையும் அது சோதித்தது.
இதற்கிடையில், ஹானர் ரோபோடிக்ஸ் ஏ1 மாடல், துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி, அமைச்சர்கள், பிரபலங்கள், ஆயிரக்கணக்கான பிற பங்கேற்பாளர்களுடன் 5 கி.மீ. தூரத்தில் பங்கேற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
இந்த இரண்டு மனித உருவ ரோபோக்களின் முதல் பங்கேற்பு, சமூக விளையாட்டு நிகழ்வுகள் உட்பட, ரோபோ கண்டுபிடிப்புகள் இப்போது மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு எவ்வளவு நெருக்கமாக வருகின்றன என்பதைக் காட்டுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 31, 2026, 11:17 am
2026 தேசிய தினக் கொண்டாட்டம் வெற்றி: பிரதமர், துணைப்பிரதமர் பாராட்டு
August 31, 2026, 10:53 am
இனவெறி, அடக்குமுறையை நிராகரிப்போம்; ஊழலிலிருந்து விடுபடுவோம்: பிரதமர்
August 31, 2026, 10:02 am
69ஆவது தேசிய தினக் கொண்டாட்டம்: பேரரசர், பேரரசியார் நாட்டு மக்களுக்கு வாழ்த்து
August 31, 2026, 9:45 am
69ஆவது தேசிய தின கொண்டாட்டம்: பேரரசர், பேரரசியார் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்
August 30, 2026, 10:32 pm
