செய்திகள் மலேசியா
ஜசெக உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த ஓங் கியான் மெங், 16ஆவது பொதுத் தேர்தலில் கைரிக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளார்
பாங்கி:
பாங்கியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஓங் கியான் மிங், ஜசெக கட்சியின் உறுப்பினர் பதவியிலிருந்து இன்று முதல் தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார்.
முன்னாள் அனைத்துலக வர்த்தகம், தொழில்துறை துணை அமைச்சரான அவர், தான் இனி ஒரு அரசியல்வாதி இல்லை.
மேலும் நாட்டின் நலனுக்காகவும், அதே எண்ணங்களையும் நலன்களையும் கொண்ட மக்களுடனும் தொடர்ந்து பணியாற்றுவேன் என்று கூறினார்.
கடந்த ஜனவரி 10 அன்று அளித்த வாக்குறுதியின்படி, 16ஆவது பொதுத் தேர்தல் பிரச்சாரத்தில் முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடினுக்கு உதவுவதற்கான தனது உறுதிப்பாட்டையும் அவர் வெளிப்படுத்தினார்.
கடந்த 2012இல் நான் கட்சியில் சேர்ந்ததிலிருந்து, செர்டாங் நாடாளுமன்ற உறுப்பினராக (2013 முதல் 2018 வரை), பாங்கி நாடாளுமன்ற உறுப்பினராக (2018 முதல் 2022 வரை), மிடியின் துணை அமைச்சராக (2018 முதல் 2020 வரை), நியமிக்கப்பட்ட மத்திய செயற்குழு உறுப்பினராக (2019 முதல் 2022 வரை), ஜசெக சிலாங்கூர் மாநிலக் குழுவின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக (2018 முதல் 2024 வரை) எனப் பல்வேறு வழிகளில் கட்சிக்கும் நாட்டிற்கும் பங்களிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்று அவர் இன்று முகநூலில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 31, 2026, 11:17 am
2026 தேசிய தினக் கொண்டாட்டம் வெற்றி: பிரதமர், துணைப்பிரதமர் பாராட்டு
August 31, 2026, 10:56 am
மலேசிய மரத்தோனில் ஹோனரின் மனித ரோபோ 10 கி.மீ. தூரத்தை நிறைவு செய்தது
August 31, 2026, 10:53 am
இனவெறி, அடக்குமுறையை நிராகரிப்போம்; ஊழலிலிருந்து விடுபடுவோம்: பிரதமர்
August 31, 2026, 10:02 am
69ஆவது தேசிய தினக் கொண்டாட்டம்: பேரரசர், பேரரசியார் நாட்டு மக்களுக்கு வாழ்த்து
August 31, 2026, 9:45 am
69ஆவது தேசிய தின கொண்டாட்டம்: பேரரசர், பேரரசியார் கலந்து கொண்டு சிறப்பித்து வருகின்றனர்
August 30, 2026, 10:32 pm
