செய்திகள் மலேசியா
கௌதம் வாசுதேவ் மேனனின் 25ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஒன்றா இரண்டா மாபெரும் இசை விழா: மலேசியாவில் நடைபெறுகிறது
கோலாலம்பூர்:
புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர், எழுத்தாளர், படைப்பாளி கௌதம் வாசுதேவ் மேனனிம் இந்திய சினிமாவில் அவரது அற்புதமான 25 ஆண்டுக்கால பயணத்தை கொண்டாடும் வகையில் ONDRA RENDA 25 YEARS OF GVM எனும் மாபெரும் கலை விழா மலேசியாவில் நடைபெறவுள்ளது.
மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த நிகழ்வு எதிர்வரும் அக்டோபர் 10ஆம் தேதி சனிக்கிழமை கோலாலம்பூரில் உள்ள The Arch Galeries-இல் நடைபெறவுள்ளது.
அதிகாரப்பூர்வ ஆதரவாளரான பெர்ஜயா டைம்ஸ் ஸ்குவேயர் ஹோட்டலில் இன்று நடைபெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பிரபல இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், ராடான் குழு தலைவர் நடிகை ராதிகா, இந்நிகழ்ச்சி இயக்குநர் அன்பா உட்பட பலர் இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இது குறித்து மை இவென்ட்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிர்வாகி டைலான் கூறியதாவது,
திரைப்படம், இசை, கதைசொல்லல், பிரபலமான கலாச்சாரத்தின் மறக்க முடியாத கொண்டாட்டமாக இவ்விழா அமையவுள்ளது.
ONDRA RENDA 25 YEARS OF GVM நிகழ்வு, இயக்குநரின் படைப்புப் பயணத்தை நேரடியாக அனுபவிக்க ரசிகர்களுக்கு வாய்பளிக்கிறது.
அதில் திரைப்படத் தயாரிப்பு, திரைக் கதைசொல்லல், இந்திய சினிமா, பொழுதுபோக்குத் துறை குறித்த அவரது நுண்ணறிவுகளும் அனுபவங்களும் ரசிகர்களோடு பகிர்ந்துகொள்ளப்படும்.
இது ஒரு வழக்கமான இசை நிகழ்சி அல்ல. இந்திய சினிமாவின் மிகவும் கொண்டாடப்படும் கதைசொல்லிகளில் ஒருவரான கௌதம் வாசுதேவ் மேனனின் உலகிற்குள் ரசிகர்களை அழைத்துச் செல்லும் ஒரு ஆழ்ந்த நேரடி அனுபவமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
GVM-இன் மிகவும் நினைவில் நிற்கும் திரைப்படங்கள், கதாபாத்திரங்கள், காட்சிகள், இசைத் தருணங்களின் பின்னணியில் உள்ள கதைகள், உத்வேகங்கள், படைப்பு செயல்முறைகள், தனிப்பட்ட அனுபவங்களை கண்டறியும் அரிய வாய்ப்பை இந்த அனுபவம் வழங்கும்.
மேலும் கார்த்திக், ஸ்ருதி ஹாசன், சத்ய பிரகாஷ், சைந்தவி, பால் டப்பா, பிளேஸ், ஹரி பிரியா, கிருஷ். இவர்களுடன் காதுக்கு இனிமை சேர்க்கும் நேரடி இசைக் குழுவும் இணைகிறது.
இவர்கள் அனைவரும் இணைந்து GVM-இன் சின்னமான இசை உலகை நேரடி நிகழ்ச்சிகள், கதைசொல்லல், உரையாடல்கள், அவரது 25 ஆண்டு படைப்புப் பயணத்தின் மறக்க முடியாத தருணங்கள் மூலம் உயிர்பிப்பார்கள்.
இந்த நிகழ்வில் சுமார் 5,000 பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்கப்படுகிறது.
இது மலேசியாவில் இந்திய சினிமா மற்றும் பொழுதுபோக்கிற்கான ஒரு முக்கிய தளமாக அமையும் என்று அவர் கூறினார்.
இம்மாபெரும் விழா My Events International, Radaan Mediaworks ஆகியவை இணைந்து படைக்கவுள்ளன.
மேலும் இவ்விரு நிறுவனங்களின் ஒத்துழைப்பு மலேசியாவில் உயர்தர இந்திய சினிமா, பொழுதுபோக்கு முயற்சிகளை உருவாக்கி மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அவ்வகையில் இந்த இசை விழா மலேசியாவின் தனி முத்திரை பதிக்கும் என்று டைலான் நம்பிக்கை தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 28, 2026, 11:26 pm
திபெத்தில் 36 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
August 28, 2026, 11:06 pm
டத்தோஸ்ரீ சரவணனின் கடிதத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கத் தயார்: டத்தோஸ்ரீ அன்வார்
August 28, 2026, 11:05 pm
கால்பந்து போட்டி இளம் தலைமுறையின் ஒழுக்கம், தன்னம்பிக்கையை வளர்க்கும்: யுனேஸ்வரன்
August 28, 2026, 10:55 pm
சிங்கப்பூரிலிருந்து ஜொகூர் செல்லும் சாலைகளில் கடும் வாகன நெரிசல்
August 28, 2026, 4:30 pm
