செய்திகள் மலேசியா
KLIA 2வில் சம்பவம்: விமானச் சக்கரத்தில் சிக்கியிருந்த சடலம்
கோலாலம்பூர்:
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் விமானத்தின் சக்கரப் பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் டோக்கியோவிலிருந்து வந்த விமானத்தில் சடலம் இருந்தது. அந்த விமானம் இன்று காலை சுமார் 6.30 மணிக்குத் தரையிறங்கியது.
விமானத்தின் சக்கரப் பகுதியைத் திறக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தப் பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசியதை அவர்கள் கவனித்தனர்.
அதைத் திறந்து பார்த்தபோது உள்ளே சடலம் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
உயிரிழந்தவருக்கு 20 முதல் 30 வயது வரை இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் இறந்து 72 மணிநேரத்துக்கும் அதிகமாகியிருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
உயிரிழந்தவரின் அடையாள ஆவணங்கள் எதுவும் கிடைக்கவில்லை.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 28, 2026, 11:26 pm
திபெத்தில் 36 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
August 28, 2026, 11:06 pm
டத்தோஸ்ரீ சரவணனின் கடிதத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கத் தயார்: டத்தோஸ்ரீ அன்வார்
August 28, 2026, 11:05 pm
கால்பந்து போட்டி இளம் தலைமுறையின் ஒழுக்கம், தன்னம்பிக்கையை வளர்க்கும்: யுனேஸ்வரன்
August 28, 2026, 10:55 pm
