செய்திகள் மலேசியா
மலேசியா - தாய்லாந்து இடையே 2003 ஆம் ஆண்டு தொழிலாளர் ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்ய கொள்கை அளவில் உடன்பாடு
புத்ராஜெயா:
மலேசியாவிற்கும் தாய்லாந்திற்கும் இடையே கடந்த 2003-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொழிலாளர் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மறுஆய்வு செய்து, தற்போதைய பொருளாதாரத் தேவைகளுக்கு ஏற்ப நவீனமயமாக்கப்பட்ட புதிய ஒப்பந்தத்தை உருவாக்க இரு நாடுகளும் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளன.
பாங்காக்கில் நடைபெற்ற 29ஆவது ஆசியான் தொழிலாளர் அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக, மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன், தாய்லாந்து தொழிலாளர் அமைச்சர் சூலபன் அமோர்ன்விவாத் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற உயர்மட்ட இருதரப்புச் சந்திப்பில் இந்த முடிவு எட்டப்பட்டது.
தற்போதைய காலத்தின் பொருளாதாரக் கோரிக்கைகளுக்கு ஏற்ப ஒப்பந்தத்தை அமைப்பது, தொழிலாளர்களின் நலன் சார்ந்த தரநிலைகளை உயர்த்துவது மற்றும் மலேசியாவில் தாய்லாந்து தொழிலாளர்களைப் பணியமர்த்தும் நடைமுறைகளை மேலும் தடையின்றி சீரமைப்பது ஆகியவற்றை முதன்மை நோக்கமாகக் கொண்டு இந்த மறுஆய்வு அமையவுள்ளதாக மனிதவள அமைச்சு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
பொதுவான தொழிலாளர் சவால்களை எதிர்கொள்ளவும் இரு நாடுகளுக்கும் இடையிலான தொழிலாளர் நடமாட்டத்தை அதிகரிக்கவும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.
புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் குறிப்பிட்ட சரத்துகள் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி இறுதி செய்வதற்காக, மலேசிய மனிதவள அமைச்சகம், தாய்லாந்து தொழிலாளர் அமைச்சகத்தின் பணிநிலை அதிகாரிகளைக் கொண்டு கூட்டுத் தொழில்நுட்பக் கூட்டத்தை நடத்த இரு அமைச்சர்களும் அதிகாரமளித்துள்ளனர்.
இதனுடன், இரு நாடுகளிலும் திறமையான, காலத்திற்கு ஏற்ப மாறக்கூடிய மற்றும் எதிர்காலத் தேவைகளுக்குத் தயாராகக்கூடிய தொழிலாளர்களை உருவாக்குவதில் தொழில்முறை மற்றும் தொழிற்கல்வி பயிற்சியின் (திவெட்) முக்கியத்துவத்தை உணர்ந்து, அதில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.
டிஜிட்டல் திவெட், பசுமைத் திறன்கள், நவீன உற்பத்தி மற்றும் இணையப் பாதுகாப்பு போன்ற புதிய மற்றும் அதிக தேவைகளுடைய துறைகளில் மாணவர் மற்றும் பயிற்றுநர் பரிமாற்றத் திட்டங்கள், தொழிற்துறை பயிற்சிகள் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட பல சாத்தியக்கூறு பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
தொழிற்துறைத் தேவைகள் மற்றும் சர்வதேசப் பாதுகாப்புத் தரநிலைகளுக்கு ஏற்ப இருதரப்பு தொழிலாளர் கட்டமைப்பை அமைப்பது இரு நாடுகளுக்கும் பரஸ்பர பொருளாதாரப் பலன்களை அளிக்கும் என அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன் வலியுறுத்தினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 28, 2026, 11:26 pm
திபெத்தில் 36 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
August 28, 2026, 11:06 pm
டத்தோஸ்ரீ சரவணனின் கடிதத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கத் தயார்: டத்தோஸ்ரீ அன்வார்
August 28, 2026, 11:05 pm
கால்பந்து போட்டி இளம் தலைமுறையின் ஒழுக்கம், தன்னம்பிக்கையை வளர்க்கும்: யுனேஸ்வரன்
August 28, 2026, 10:55 pm
சிங்கப்பூரிலிருந்து ஜொகூர் செல்லும் சாலைகளில் கடும் வாகன நெரிசல்
August 28, 2026, 4:30 pm
