செய்திகள் மலேசியா
சிங்கப்பூரிலிருந்து ஜொகூர் செல்லும் சாலைகளில் கடும் வாகன நெரிசல்
ஜோகூர் பாரு:
சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்குச் செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இரவு 9 மணி நிலவரப்படி, உட்லண்ட்ஸிலிருந்து ஜொகூருக்கு வெளியேறும் சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஜொகூர் சென்றுசேர அதிகபட்சம் 145 நிமிடங்கள் அதாவது சுமார் இரண்டரை மணிநேரம் ஆகலாம் என்று Beat the Jam செயலி காட்டுகிறது.
துவாஸ் வழியாகச் செல்லும் சாலையிலும் நெரிசல் அதிகரித்துள்ளது.
அந்த வழியாக ஜொகூர் சென்றுசேர கூடியபட்சம் 122 நிமிடங்கள் அதாவது சுமார் 2 மணிநேரம் ஆகலாம் என்று செயலி காட்டுகிறது.
இதற்கிடையே, உட்லண்ட்ஸ் வழியாக ஜொகூருக்குச் செல்லும் சாலையில் போக்குவரத்து தாமதமாகலாம் என்று சிங்கப்பூர்க் குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம் கூறியிருக்கிறது.
போக்குவரத்து நிலவரத்தைச் சரிபார்த்துவிட்டு பயணம் மேற்கொள்ளுமாறு அது Facebook பதிவில் கேட்டுக்கொண்டிருக்கிறது.
மலேசியாவில் இந்த வாரம் நீண்ட விடுமுறை தொடங்கவுள்ளது.
வரும் திங்கட்கிழமை முதல் அங்கு ஒரு வாரத்திற்குப் பள்ளி விடுமுறை.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 28, 2026, 11:26 pm
திபெத்தில் 36 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்
August 28, 2026, 11:06 pm
டத்தோஸ்ரீ சரவணனின் கடிதத்தை அதிகாரிகளிடம் ஒப்படைக்கத் தயார்: டத்தோஸ்ரீ அன்வார்
August 28, 2026, 11:05 pm
கால்பந்து போட்டி இளம் தலைமுறையின் ஒழுக்கம், தன்னம்பிக்கையை வளர்க்கும்: யுனேஸ்வரன்
August 28, 2026, 4:30 pm
