நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அஸ்மின் மீண்டும் கெஅடிலான் கட்சிக்கு அழைக்கப்பட்டது குறித்து எனக்கு தெரியாது: பிரதமர்

கோலாலம்பூர்:

முன்னாள் கெஅடிலான் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ முகமது அஸ்மின் அலி கட்சிக்கு மீண்டும் அழைக்கப்பட்டார் என்ற கூற்று குறித்து எனக்கு தெரியாது.

பிரதமரும் கெஅடிலான் தலைவருமான டத்தோஶ்ரீ  அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அவருக்கு  விடுக்கப்பட்ட எந்த அழைப்பு குறித்தும் தனக்குத் தெரிவிக்கப்படவில்லை.

யாராவது அவரை அழைத்தார்களா? அழைப்பு ஏதும் இருந்ததா? எனக்குத் தெரிவிக்கப்படவில்லை என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

முன்னாள் கட்சி உறுப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும், தற்போது பெர்சத்து கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் டத்தோஶ்ரீ அஸ்மின், கெஅடிலான் கட்சியில் மீண்டும் சேர மறுத்தது குறித்துக் கருத்துத் தெரிவிக்குமாறு கேட்டபோது டத்தோஶ்ரீ அன்வார் இவ்வாறு கூறினார்.

தற்போது தான் இணைந்துள்ள பெர்சத்து கட்சி, அதன் அரசியல் இருப்பை உறுதி செய்வதற்கான போராட்டத்திற்கு ஒரு தளமாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்ததாக அஸ்மின் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset