செய்திகள் மலேசியா
நேப்பாள வெள்ளம்: உடனடி நிவாரணப் பணிகளுக்கு பிரதமர் உத்தரவு
கோலாலம்பூர்:
நேப்பாளம், இந்தியாவின் பல பகுதிகளைத் தாக்கிய பேரழிவுகரமான வெள்ளத்தைத் தொடர்ந்து, நிவாரணப் பணிகளை உடனடியாக ஒருங்கிணைக்குமாறு பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தேசியப் பாதுகாப்பு மன்றம், வெளியுறவு அமைச்சு உள்ளிட்ட அனைத்து அமைப்புகளையும், நிலைமையை உடனடியாக மதிப்பிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் முயற்சிகளைத் துரிதப்படுத்த இந்தியா மற்றும் நேபாளத்தில் உள்ள நமது தூதரகங்களைத் தொடர்பு கொள்ளுமாறு நான் கேட்டுக் கொண்டுள்ளேன்.
கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் இன்று நடைபெற்ற தேசிய புத்தாக்கம், வர்த்தகமயமாக்கல் கண்காட்சி 2026-ஐத் தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
நேற்று வெள்ளம் தாக்கியதில் இருந்து, நேபாளத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட மலேசியர்கள் தங்கள் குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள முடியாமல் தவிப்பது குறித்த கவலைகளைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காத்மாண்டுவில் உள்ள மலேசியத் தூதரகத்தின் பொறுப்புத் தூதர் முகமது ஃபிர்தாஸ் அஸ்மான், தகவல் தொடர்பு உள்கட்டமைப்பில் ஏற்பட்ட சேதம் மற்றும் சாலைப் போக்குவரத்தில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மலேசியர்கள் குறித்த தகவல்களைப் பெறுவது அதிகாரிகளுக்குக் கடினமாக உள்ளது.
நேப்பாள அதிகாரிகள் தேடுதல், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தியுள்ளனர்.
ஆனாலும் பாதிக்கப்பட்ட பல பகுதிகளைச் சென்றடைவது இன்னும் கடினமாக உள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 27, 2026, 12:31 pm
அஸ்மின் மீண்டும் கெஅடிலான் கட்சிக்கு அழைக்கப்பட்டது குறித்து எனக்கு தெரியாது: பிரதமர்
August 27, 2026, 12:30 pm
நேப்பாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் காணாமல் போயினர்
August 27, 2026, 12:07 pm
ஜொகூர் மாநில சட்டமன்ற சபாநாயகராக பூலோ கசாப் சட்டமன்ற உறுப்பினர் சஹாரி சரிப் நியமனம்
August 27, 2026, 10:33 am
நேப்பாள வெள்ளம்: 50க்கும் மேற்பட்ட மலேசியர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை
August 27, 2026, 10:20 am
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் குற்றச்சாட்டுகளை இஸ்மாயில் சப்ரி மறுத்தார்
August 26, 2026, 11:01 pm
டத்தோ பட்டம் பெற்ற டாக்டர் ஜஃப்ரீனா புருகானுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
August 26, 2026, 10:55 pm
