செய்திகள் மலேசியா
நேப்பாள வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து 11 மலேசியர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது: விஸ்மா புத்ரா
புத்ராஜெயா:
நேபாளத்தில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, ரசுவா மாவட்டத்தில் இருப்பதாக நம்பப்படும் 11 மலேசியர்களுடனான தொடர்பை துண்டிக்கப்பட்டுள்ளது.
காத்மாண்டுவில் உள்ள மலேசியத் தூதரகத்திற்குப் பயண முகவர் நிறுவனங்களிடமிருந்து இந்த தகவல்கள் வந்துள்ளன.
விஸ்மா புத்ரா என்றும் அழைக்கப்படும் வெளியுறவு அமைச்சு,
இந்தப் பேரிடரால் ஏற்பட்ட தகவல் தொடர்பு வலையமைப்புகள், மின்சார விநியோகத்தில் ஏற்பட்ட கடுமையான இடையூறுகளின் நேரடி விளைவாகவே இந்தத் தொடர்பு துண்டிப்பு ஏற்பட்டதாக நம்பப்படுகிறது எனக் கூறியுள்ளது.
பாதிக்கப்பட்ட மலேசிய மக்களைக் கண்டறிவதற்கும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், தூதரகம் உள்ளூர் அதிகாரிகளுடனும், நேபாள அரசாங்கத்தால் தற்போது பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்களுடனும் தீவிரமாக ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது என்று அந்த அமைச்சு தெரிவித்தது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 26, 2026, 11:01 pm
டத்தோ பட்டம் பெற்ற டாக்டர் ஜஃப்ரீனா புருகானுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
August 26, 2026, 10:51 pm
சுதந்திர தினத்திற்கு முன்னதாக புகைமூட்டம் கட்டுப்பாட்டில் வர மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்: பிரதமர்
August 26, 2026, 10:50 pm
தாபோங் ஹாஜியின் முன்னாள் தலைவர், முன்னாள் கருவூலச் செயலாளர் ஆகியோரை எம்ஏசிசி கைது செய்தது
August 26, 2026, 6:05 pm
