நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அனைவரின் பார்வையும் இன்று கோலாலம்பூர் நீதிமன்றத்தை நோக்கியே:  நாட்டின் மூன்று முன்னாள்  பிரதமர்கள் வெவ்வேறு வழக்குகளில் இன்று ஆஜர் 

கோலாலம்பூர்: 

ஜாலான் டூத்தாவில் அமைந்துள்ள கோலாலம்பூர் நீதிமன்ற வளாகம் தற்போது ஊடகவியலாளர்கள், பொதுமக்களின் கவனம் கொண்ட பகுதியாக விளங்கியுள்ளது. 

இன்று மூன்று முன்னாள் பிரதமர்கள் வெவ்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர். 

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று கோலாலம்பூர் நீதிமன்றத்தில் தனது வழக்கு விசாரணையை எதிர்நோக்கியுள்ளார். 

எம்.ஏ.சி.சியின் விதிமுறைப்படி தனது சொத்து விபரங்களை அறிவிக்காத நிலையில் அவர் மீது இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. 

மேலும், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் ஒரெ மலேசிய மேம்பாட்டு நிறுவனம் தொடர்பான பல பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சிவில் வழக்கின் தொடர் நடவடிக்கைகள் குறித்து அவர் இன்று ஆஜராகிறார். 

தொடர்ந்து ஜானா விபாவா நிதிமுறைகேடு தொடர்பாக முன்னாள் பிரதமர் டான்ஶ்ரீ முஹைடின் யாசின் மீது ஏழு குற்றங்கள் இன்று வழக்கு விசாரணை வருகிறது. 

முன்னாள் பிரதமர்களின் வருகை காரணமாக டூத்தாவில் உள்ள கோலாலம்பூர் நீதிமன்ற வளாகம் பரபரப்பு தொற்றிக்கொண்டது .

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset