செய்திகள் மலேசியா
நேப்பாள வெள்ளம்: 50க்கும் மேற்பட்ட மலேசியர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை
காத்மாண்டு:
புதன்கிழமை ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தைத் தொடர்ந்து, நேபாளத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட மலேசியர்களை அவர்களது குடும்பத்தினர் இன்னும் தொடர்புகொள்ள முடியவில்லை.
இந்த வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான உள்ளூர், வெளிநாட்டினரும் காணாமல் போயுள்ளனர்.
தொடர்புகொள்ளப்படாத மலேசியர்கள் குறித்த தகவல்களை நாங்கள் இன்னும் சேகரித்து வருகிறோம்.
50க்கும் மேற்பட்ட மலேசியர்களை அவர்களது குடும்பத்தினர் தொடர்பு கொள்ளத் தவறிவிட்டனர் என்று காத்மாண்டுவில் உள்ள மலேசியத் தூதரகத்தின் பொறுப்புத் தூதர் முஹம்மது ஃபிர்தாஸ் அஸ்மான் நேற்று தெரிவித்தார்.
போதே கோஷி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அப் பகுதிக்குச் செல்லும் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்காக நேபாள அரசாங்கம் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தியுள்ளது என்றும் ஃபிர்தாஸ் கூறினார்.
நாங்கள் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம் என்று கூறிய அவர், தகவல் தொடர்பு உள்கட்டமைப்பு சேதமடைந்துள்ளதால் காணாமல் போன மலேசியர்கள் குறித்த தகவல்களைப் பெறுவது கடினமாக உள்ளது என்றும் மேலும் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 27, 2026, 10:20 am
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் குற்றச்சாட்டுகளை இஸ்மாயில் சப்ரி மறுத்தார்
August 26, 2026, 11:01 pm
டத்தோ பட்டம் பெற்ற டாக்டர் ஜஃப்ரீனா புருகானுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
August 26, 2026, 10:55 pm
நேப்பாள வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து 11 மலேசியர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது: விஸ்மா புத்ரா
August 26, 2026, 10:51 pm
சுதந்திர தினத்திற்கு முன்னதாக புகைமூட்டம் கட்டுப்பாட்டில் வர மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்: பிரதமர்
August 26, 2026, 10:50 pm
