நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நேப்பாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் காணாமல் போயினர்

காத்மாண்டு:

புதன்கிழமை ஏற்பட்ட பேரழிவுகரமான திடீர் வெள்ளத்தில் குறைந்தது 160 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, நேபாளத்தில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டினர் காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டவர்களில், 50க்கும் மேற்பட்ட மலேசியர்கள் உட்பட, குறைந்தது 341 வெளிநாட்டினர் இருப்பதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

உலகெங்கிலும் உள்ள மலையேறுபவர்களும் சாகசப் பயணிகளும், எவரெஸ்ட் சிகரம் உட்பட உலகின் மிக உயரமான சில சிகரங்களில் தங்கள் திறமையைச் சோதிப்பதற்காக இந்த இமயமலை நாட்டிற்குப் படையெடுத்து வருகின்றனர்.

மேலும் நேப்பாள சுற்றுலா வாரியத்தின்படி, அண்டை நாட்டைச் சேர்ந்த 142 இந்தியர்கள் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

53 உக்ரேனியர்கள் காணாமல் போயிருக்கலாம் என நம்புவதாக நேப்பாள சுற்றுலா போலிஸ் தங்களுக்குத் தெரிவித்ததாக உக்ரேனிய வெளியுறவு அமைச்சு கூறியது.

வெள்ளத்தைத் தொடர்ந்து மொத்தம் 34 ஆஸ்திரேலியர்கள் காணாமல் போயுள்ளனர் என்று அந்நாட்டு பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறினார்.

இதே போன்று இங்கிலாந்து, தென் கொரியா, ஜப்பான், தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, போர்த்துகல், நெதர்லாந்து, இத்தாலி போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களும் காணாமல் போயுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset