செய்திகள் மலேசியா
சுதந்திர தினத்திற்கு முன்னதாக புகைமூட்டம் கட்டுப்பாட்டில் வர மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்: பிரதமர்
சைபர்ஜெயா:
சுதந்திர தினம், மலேசிய தினக் கொண்டாட்டங்கள் சுமுகமாக நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில், நாட்டில் நிலவும் புகைமூட்டச் சூழல் கட்டுப்படுத்தப்பட மக்கள் அனைவரும் பிரார்த்தனை செய்யுமாறு டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆகஸ்ட் 31 அன்று சுதந்திர தினத்தையும், செப்டம்பர் 16 அன்று மலேசிய தினத்தையும் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை நாடு தற்போது செய்து வருவதாக பிரதமர் கூறினார்.
மலேசியாவின் சுதந்திர தினத்தையும், அதனைத் தொடர்ந்து வரும் மலேசிய தினத்தையும் கொண்டாடவும் நாங்கள் தயாராகி வருகிறோம்.
ஆகஸ்ட் 31 அன்று சுதந்திர தினம் மற்றும் செப்டம்பர் 16 அன்று மலேசிய தினம். கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெறுவதற்காக, புகைமூட்டம் சிறப்பாகக் கட்டுப்படுத்தப்படும் என்று இறைவனை பிரார்த்திக்கிறோம் என்று அவர் கூறினார்.
இங்கு நடைபெற்ற டெலிகாம் மலேசியா நிறுவனத்தின் 80வது ஆண்டு விழா தொடக்க விழாவில் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.
இதற்கிடையில், புதன்கிழமை மாலை 7 மணி நிலவரப்படி, 11 பகுதிகளில் காற்று மாசுபடுத்தும் குறியீட்டு அளவுகள் ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியுள்ளன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 26, 2026, 11:01 pm
டத்தோ பட்டம் பெற்ற டாக்டர் ஜஃப்ரீனா புருகானுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
August 26, 2026, 10:55 pm
நேப்பாள வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து 11 மலேசியர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது: விஸ்மா புத்ரா
August 26, 2026, 10:50 pm
தாபோங் ஹாஜியின் முன்னாள் தலைவர், முன்னாள் கருவூலச் செயலாளர் ஆகியோரை எம்ஏசிசி கைது செய்தது
August 26, 2026, 6:05 pm
