செய்திகள் மலேசியா
தாபோங் ஹாஜியின் முன்னாள் தலைவர், முன்னாள் கருவூலச் செயலாளர் ஆகியோரை எம்ஏசிசி கைது செய்தது
புத்ராஜெயா:
தாபோங் ஹாஜி தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கையில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்த விசாரணைகளுக்கு உதவுவதற்காக எம்ஏசிசி அதன் முன்னாள் தலைவர் ஒருவரையும், முன்னாள் கருவூலப் பொதுச் செயலாளர் ஒருவரையும் கைது செய்துள்ளது.
எம்ஏசிசி வட்டாரங்களின்படி, 60 வயதுகளில் உள்ள அந்த இரு நபர்களும், புத்ராஜயாவில் உள்ள ஊழல் தடுப்பு அமைப்பின் தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்ததைத் தொடர்ந்து, இன்று மாலை சுமார் 4 மணியளவில் கைது செய்யப்பட்டனர்.
தாபோங் ஹாஜி அறிக்கையில் எழுப்பப்பட்ட கண்டுபிடிப்புகள், சிக்கல்கள் குறித்த விசாரணைக்கு உதவுவதற்காக அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
தற்சமயம் அவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
எம்ஏசிசி தனது டிக்டாக் கணக்கில் வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட இருவரையும் காவலில் வைப்பதற்கான உத்தரவைப் பெறுவதற்காக, அரசுத் தரப்பு நாளை புத்ராஜயா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 26, 2026, 11:01 pm
டத்தோ பட்டம் பெற்ற டாக்டர் ஜஃப்ரீனா புருகானுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
August 26, 2026, 10:55 pm
நேப்பாள வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து 11 மலேசியர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது: விஸ்மா புத்ரா
August 26, 2026, 10:51 pm
சுதந்திர தினத்திற்கு முன்னதாக புகைமூட்டம் கட்டுப்பாட்டில் வர மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்: பிரதமர்
August 26, 2026, 6:05 pm
