நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

குறைந்த கட்டண விமானச் சேவையைத் தொடங்கும் 2 புதிய நிறுவனங்கள்

கோலாலம்பூர்:

குறைந்த கட்டண விமானச் சேவையை அளிக்கும் புதிய விமான நிறுவனத்துக்கு நிபந்தனைகளுடன் கூடிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக, அந்நிறுவனம் இரண்டு ஏர்பஸ் 320 ரக விமானங்களைப் பயன்படுத்தும் எனத் தெரிய வந்துள்ளது. மேலும், இத்துறையில் ஏர் ஆசியாவின் ஆதிக்கத்துக்கு சவால் விடுக்கும் என்றும் கூறப்படுகிறது.

விமானப் போக்குவரத்து ஆணையத்தின் முன்னாள் தலைமை இயக்குநர் அசாருதீன் அப்துல் ரஹ்மான் (Azharuddin Abdul Rahman), மலேசியா ஏர்போர்ட் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட்-ன் முன்னாள் தலைமைச் செயலதிகாரி அப்துல் ஹமீத் முஹம்மது அலி (Abd Hamid Mohd Ali), ஏர் ஆசியா குழுமத்தின் விற்பனை மற்றும் விநியோகப் பிரிவின் முன்னாள் தலைவர் Teo Kheng Hock ஆகிய மூவரும் இப் புதிய நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளை தொழிலதிபர் Goh Hwan Hua வைத்திருப்பதாக நம்பப்படுகிறது. விமானச் சேவைக்கான உரிமம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் புதிய நிறுவனம் மிக விரைவில் செயல்படத் தொடங்கும் எனத் தெரிகிறது.

இதற்கிடையே, மேலும் ஒரு குறைந்த கட்டணச் சேவை அளிக்கும் விமான நிறுவனத்துக்கு மலேசிய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளதாக The Edge Markets இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

SKS Airways என்ற அந்த நிறுவனம் இம்மாதம் சுபாங், பங்கோர் இடையே தனது சேவையைத் தொடங்கும் என்றும், ஜோகூரைச் சேர்ந்த தொழிலதிபர் Alan Sim இந்நிறுவனத்தை தொடங்கி உள்ளதாகவும் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

+ - reset