நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சவூதி புரோ லீக்கில் அல் நசர் வெற்றி: 977ஆவது கோலை அடித்த ரொனால்டோ

ரியாத்:

சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்து போட்டியில் அல் நசர் அணியினர் வெற்றி பெற்றனர்.

பிரின்ஸ் பைசால் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் ரியாத் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் அல் ரியாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அல் நசர் அணியின் வெற்றி கோல்களை அப்துல்லா அல்-அம்ரி, ஏஞ்சலோ கேப்ரியல், ஜோனோ பெலிக்ஸ்  ஆகியோர் அடித்தனர்.

குறிப்பாக ஆட்டத்தின்  58ஆவது நிமிடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அல் நசர் அணிக்காக ஒரு கோலை அடித்தார்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ மாற்று வீரராகக் களமிறங்கி தனது 977ஆவது கோலை அடித்து, தொழில்முறை வீரராகத் தனது 25ஆவது சீசனைத் தொடங்கினார்.

மேலும் இந்த கோல் ரொனால்டோவை 1,000 கோல்கள் என்ற மைல்கல்லை நெருங்கச் செய்துள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset