செய்திகள் தமிழ் தொடர்புகள்
“கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை குறுவை தொகுப்பில் காட்டாதது ஏன்?”: உதயநிதி கேள்வி
சென்னை:
‘குறுவை சிறப்புத் தொகுப்பு அறிவிக்கப்பட்டு 2 மாதங்கள் கடந்துவிட்ட பிறகும், விவசாயிகளை அது சென்று சேராமல் இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
குறுவை தொகுப்பு நிதி விவசாயிகளுக்குச் சென்று சேர இந்த விவசாயிகள் விரோத அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
‘மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்காத காரணத்தால், குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது. விவசாயிகளுக்கு அரசு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று பேரவையில் பேசி இருந்தேன்.
வறட்சி நிவாரணம் பற்றிக் கேட்டதற்கு, குறுவை சிறப்புத் தொகுப்புக்காக நிதி ஒதுக்கியதைப் பற்றி முதல்வர் விளக்கினார். ஆனால், அவர் ஒதுக்கியதாக சொன்ன அந்த நிதியும் இன்று வரை விவசாயிகளைச் சென்றடையவில்லை.
இது தொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. அவற்றை இந்த திறமையற்ற அரசு கவனித்ததா? அல்லது வழக்கம்போல விவசாயிகள் பிரச்சினையில் அலட்சியம் காட்டுகிறதா?
எம்.எல்.ஏ.க்களுக்குக் கார் வாங்குவதில் காட்டும் வேகத்தை, விவசாயிகளுக்கான நிதியைக் கொண்டு சேர்ப்பதில் இந்த அரசு காட்டியிருக்க வேண்டும்.
விவசாயிகள் நலனில் அக்கறையின்றி தொடர்ந்து மெத்தனப் போக்கோடு நடந்து கொள்வது ஏற்புடையது அல்ல. குறுவை சிறப்புத் தொகுப்பு நிதி விவசாயிகளுக்குச் சென்று சேர இந்த விவசாயிகள் விரோத அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
November 12, 2026, 1:23 pm
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக ஆளுநர் சந்திக்கிறார்: சட்ட ஒழுங்கு பிரச்சினை குறித்து விவாதிப்பாரா?
November 6, 2026, 1:54 pm
சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.70 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்குப் பயணம்
November 6, 2026, 11:57 am
குழந்தைகளுக்கு பிடிக்கும் வடிவிலான பட்டாசுகள் நிகழாண்டில் புதிய வரவாக விற்பனைக்கு வந்துள்ளன
November 5, 2026, 9:31 pm
தீபாவளியை முன்னிட்டு நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளும் இயங்கும்: தமிழக அரசு அறிவிப்பு
November 4, 2026, 10:59 am
முன்னாள் சுகாதார அமைச்சா் சி.விஜயபாஸ்கருக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியது
November 2, 2026, 10:31 pm
தீபாவளியை ஒட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க மேலும் 6 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
November 2, 2026, 10:20 pm
கூட்டுறவுத் துறை ஊழியர்களுக்கு 20% வரை தீபாவளி போனஸ்: முதல்வர் விஜய் உத்தரவு
November 1, 2026, 1:46 pm
வாலி பிறந்த நாள் விழாவில் டத்தோ ஸ்ரீ சரவணன் சிறப்புரை
October 31, 2026, 5:52 pm
