நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்லாத்தை அவமதித்த சிங்கப்பூர் நாட்டு ஆடவருக்கு 14 நாட்கள் சிறை, RM 7,000 ரிங்கிட் அபராதம் விதிப்பு 

ஜொகூர் பாரு: 

இஸ்லாத்தை அவமதித்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட 56 வயதான சிங்கப்பூர் நாட்டு ஆடவருக்கு 14 நாட்கள் சிறை, RM7000 ரிங்கிட் அபராதம் விதித்து ஜொகூர் பாரு மாஜிஸ்டிரெட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

சந்தேக நபரான அனிம் அடாம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து மாஜிஸ்டிரெட் ஏ. ஷார்மினி இந்த தண்டனையை வழங்கினார். 

அபராதத்தைச் செலுத்தத் தவறினால் மேலும் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.

கடந்த ஜூலை 30-ஆம் தேதி ஜொகூர் பாருவில் பயணம் செய்தபோது, திருக்குர்ஆன் குறித்து பிறரின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் அவர் பேசியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

குற்றவியல் சட்டப்பிரிவு 298-ன் கீழ் அவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தச் சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி 3R  பிரச்சனையை ஏற்படுத்தியதால், அரசுத் தரப்பு வழக்கறிஞர் தகுந்த தண்டனையைக் கோரினார்.

ஈ-ஹெய்லிங் காரில் பயணம் செய்தபோது அவர் பேசிய உரையாடலை ஓட்டுநர் சமூக வலைதளத்தில் பதிவேற்றினார். புகாரைத் தொடர்ந்து, அவர் கடந்த செவ்வாய்க்கிழமை சுல்தான் இஸ்கந்தர் கட்டிடத்தில் கைது செய்யப்பட்டார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset