செய்திகள் மலேசியா
ஃபெல்டா தொடர்பான விசாரணை அறிக்கை விரைவில் வெளியிடப்படும்: டத்தோஶ்ரீ அன்வார் தகவல்
கோலாலம்பூர்:
ஃபெல்டா தொடர்பான சிறப்பு பணிக்குழுவின் விசாரணை நிறைவு பெற்றதும் அதன் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
முழுமையான விசாரணை அறிக்கை கிடைத்தவுடன் அதன் முடிவுகள் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
முன்னதாக, இன்று நடைபெற்ற ஃபெல்டா உயர் நிர்வாகத்துடனான சந்திப்பு கூட்டத்திற்குப் பிறகு ஊடகங்களைச் சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
முந்தைய நிர்வாக சிக்கல்களைக் கண்டறிவதோடு, ஃபெல்டாவின் மேலாண்மையை மேம்படுத்துவதும் இந்த விசாரணையின் முதன்மை நோக்கமாகும்.
முந்தைய தவறு செய்தவர்கள் மீது எவ்வித சமரசமும் இன்றி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.
சிறப்பு பணிக்குழுவின் விசாரணை நிலவரங்கள் குறித்து பிரதமர் அன்வார் ஏற்கனவே பேரரசரிடம் தெரிவித்துள்ளார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 21, 2026, 5:52 pm
இஸ்லாத்தை அவமதித்த சிங்கப்பூர் நாட்டு ஆடவருக்கு 14 நாட்கள் சிறை, RM 7,000 ரிங்கிட் அபராதம் விதிப்பு
August 21, 2026, 5:43 pm
பினாங்கு மிரட்டல் வழக்கு: பொது நடவடிக்கைப் படையைச் சேர்ந்த 10 காவலர்கள் கைது
August 21, 2026, 5:12 pm
சரவாக் மாநில கொடியை மிதித்த டிக் டாக் பயனர்: போலிஸ் தீவிர விசாரணை
August 21, 2026, 5:09 pm
தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு RAPID KL சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது
August 21, 2026, 4:07 pm
வேப் மின் சிகரெட் பயன்பாட்டுக்கு தடை; பேரா அரசுக்கு எதிராக இரு தரப்பினர் வழக்கு: டத்தோ சிவநேசன்
August 21, 2026, 3:34 pm
கிள்ளான் தெங்கு கிளானாவில் உள்ள நகைக்கடையில் கொள்ளை முயற்சி: போலிஸ் விசாரணை
August 21, 2026, 1:20 pm
