நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேசியா நிஷா மரண வழக்கு; பகடிவதை,  இனவெறி குறித்த உள் விசாரணையை உத்தரவு: கல்வியமைச்சு

புத்ராஜெயா:

தலைநகரில் சமீபத்தில் நிகழ்ந்த ஒரு இடைநிலைப் பள்ளி மாணவியின் மரணம் குறித்த உள் விசாரணையை உடனடியாக தொடங்க வேண்டும்.

மாவட்டக் கல்வி இலாகா, கூட்டாட்சிப் பிரதேச கல்வித் துறை ஆகியவற்றுக்கு கல்வியமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

பகடிவதை, இனவெறி தொடர்பான குற்றச்சாட்டுகள் உட்பட, பொது அக்கறைக்குரிய அனைத்து விஷயங்களும் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டு, உண்மைகள், உரிய நடைமுறைகளின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும் என்று கல்வியமைச்சர் பட்லினா சிடேக் கூறினார்.

கோலாலம்பூரில் உள்ள ஒரு பள்ளியில் பயின்ற எங்கள் பிள்ளை சமீபத்தில் உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினருக்கும் பள்ளி ஊழியர்களுக்கும் எனது எண்ணங்களும் அனுதாபங்களும் தொடர்ந்து இருந்து வருகின்றன.

இந்த விவகாரம் முழுமையாகக் கையாளப்படுவதை உறுதி செய்வதற்காக, கல்வியமைச்சு போலிஸ்க்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருவதுடன், சமூக நலத்துறை, மலேசிய சுகாதார அமைச்சுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது என்று அவர் தனது முகநூல் பதிவில் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அனைத்துப் பள்ளி ஊழியர்களுக்கும் உரிய கவனமும் ஆதரவும் அளிக்கப்பட்டு வருவதாக பட்லினா கூறினார்.

கல்வியமைச்சின் ஆலோசகர் குழுவால் குடும்பத்தினருக்கு உளவியல் சமூக ஆதரவு வழங்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் ஆசிரியர்களுக்கு நடைபெற்று வரும் விசாரணை மற்றும் சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பினரின் நலன்,நல்வாழ்வுக்குத் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset