நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சரவாக் மாநில கொடியை மிதித்த டிக் டாக் பயனர்: போலிஸ் தீவிர விசாரணை 

கூச்சிங்: 

சரவாக் மாநில கொடியை மிதித்த சம்பவம் தொடர்பாக  டிக்டாக் சமூக ஊடக பயனர் ஒருவரிடம் போலிஸ் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.     

இந்தச் சம்பவம் தொடர்பாக கூச்சிங் மாவட்ட காவல்துறை தலைமையகத்திற்கு இரண்டு புகார்கள் வந்துள்ளதாக கூச்சிங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ACP அலெக்சன் நாகா சாபு தெரிவித்துள்ளார்.

ஐந்து வினாடிகள் மட்டுமே கொண்ட இந்த வீடியோவை ஒரு டிக் டாக் பயனர் பதிவேற்றம் செய்துள்ளார்

பின்னர் இந்த வீடியோ பிற சமூக வலைதள கணக்குகளிலும் வேகமாகப் பகிரப்பட்டுள்ளது.

அமைதியைக் குலைக்கும் வகையில் செயல்பட்டதற்காக, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 504-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

மேலும், நெட்வொர்க் வசதிகளை தவறாகப் பயன்படுத்தித் தவறான அல்லது அருவருப்பான கருத்துகளைப் பரப்பியதற்காகத் தகவல் தொடர்புகள் மற்றும் பன்முக ஊடகச் சட்டம் 1998-இன் பிரிவு 233-இன் கீழும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதன்கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக RM50,000 அபராதம், ஒரு வருடம் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

பொதுமக்கள் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையிலோ அல்லது பொதுமக்களின் கோபத்தைத் தூண்டும் வகையிலோ நடக்க வேண்டாம் என்று காவல் அதிகாரி அலெக்சன் எச்சரித்துள்ளார்.

இந்தச் சம்பவம் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், பொதுமக்கள் கூச்சிங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தை 082-244444 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset