செய்திகள் மலேசியா
தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு RAPID KL சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது
கோலாலம்பூர்:
நாட்டின் 69ஆவது தேசிய தின கொண்டாட்டம் புத்ராஜெயா சதுக்கத்தில் நடைபெறவுள்ள நிலையில் ஆகஸ்ட் 30 முதல் 31 வரை குறிப்பிட்ட ரயில் மற்றும் பேருந்து சேவைகள் 24 மணி நேரமும் தொடர்ச்சியாக இயக்கப்படும் என Rapid KL அறிவித்துள்ளது.
இந்த 24 மணி நேரச் சேவையில் எல்ஆர்டி, எம்ஆர்டி மற்றும் கோலாலம்பூர் மோனோரயில் ஆகிய அனைத்து ரயில் சேவைகளும் அடங்கும். பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பைக் கையாள, முக்கிய பாதைகளில் ரயில்களின் வருகை இடைவெளி குறைக்கப்பட்டு, தேவைக்கேற்ப கூடுதல் ரயில்களும் இயக்கப்படும்.
ரயில் சேவைகளுடன் சேர்த்து, சன்வே பிஆர்டி பேருந்து சேவை, சில குறிப்பிட்ட பேருந்து பாதைகள் மற்றும் ராபிட் கேஎல் ஆன்-டிமாண்ட் சேவைகளும் 24 மணி நேரமும் இடைவிடாமல் செயல்படும். இதன் மூலம் பொதுமக்களுக்குப் பயணத் திட்டங்களில் கூடுதல் வசதி ஏற்படும்.
புத்ராஜெயாவில் நடைபெறும் கொண்டாட்டத்திற்குச் செல்லும் மக்களின் வசதிக்காக, 103 இலவச இணைப்புப் பேருந்துகளை (Shuttle Buses) ராபிட் கேஎல் ஏற்பாடு செய்துள்ளது. இந்த இலவச பேருந்து சேவை இரு முக்கிய பாதைகளில் இயக்கப்படவுள்ளது.
பயணிகளின் நடமாட்டத்தை சீராக மேலாண்மை செய்யவும், நிலையங்களில் பாதுகாப்பை உறுதி செய்யவும் 5,000-க்கும் மேற்பட்ட முன்னணி ஊழியர்கள் ஷிஃப்ட் முறையில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் ராபிட் கேஎல் தெரிவித்துள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 21, 2026, 5:52 pm
இஸ்லாத்தை அவமதித்த சிங்கப்பூர் நாட்டு ஆடவருக்கு 14 நாட்கள் சிறை, RM 7,000 ரிங்கிட் அபராதம் விதிப்பு
August 21, 2026, 5:43 pm
பினாங்கு மிரட்டல் வழக்கு: பொது நடவடிக்கைப் படையைச் சேர்ந்த 10 காவலர்கள் கைது
August 21, 2026, 5:12 pm
சரவாக் மாநில கொடியை மிதித்த டிக் டாக் பயனர்: போலிஸ் தீவிர விசாரணை
August 21, 2026, 4:07 pm
வேப் மின் சிகரெட் பயன்பாட்டுக்கு தடை; பேரா அரசுக்கு எதிராக இரு தரப்பினர் வழக்கு: டத்தோ சிவநேசன்
August 21, 2026, 3:34 pm
கிள்ளான் தெங்கு கிளானாவில் உள்ள நகைக்கடையில் கொள்ளை முயற்சி: போலிஸ் விசாரணை
August 21, 2026, 3:20 pm
ஃபெல்டா தொடர்பான விசாரணை அறிக்கை விரைவில் வெளியிடப்படும்: டத்தோஶ்ரீ அன்வார் தகவல்
August 21, 2026, 1:20 pm
