செய்திகள் மலேசியா
வேப் மின் சிகரெட் பயன்பாட்டுக்கு தடை; பேரா அரசுக்கு எதிராக இரு தரப்பினர் வழக்கு: டத்தோ சிவநேசன்
ஈப்போ:
வேப் எனப்படும் மின்னியல் சிகரெட் பயன்பாட்டை தடைசெய்துள்ள பேரா மாநில அரசுக்கு இரு தரப்பினர் வழக்கை தொடுத்துள்ளனர்.
இந்த வேப் சிகரேட் பயன்பாடு பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வருவதால், அதனை பேராவில் இவ்வாண்டு தொடக்கம் முதல் தடை செய்ய நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படுத்தப்பட்டது என்று பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ அ.சிவநேசன் தெரிவித்தார்.
இதனிடையே இந்த தடையை எதிர்த்து ஒரு அமைப்பும் தனி நபர் ஒருவரும் ஈப்போவில் உள்ள நீதிமன்றத்தில் இவ்வாண்டு மார்ச் 18ஆம் தேதி வழக்கை பதிவு செய்துள்ளது.
ஆரம்பத்தில் வேப் சிகரெட் என்பது சாதாரண சிகரெட்டுக்கு மாற்றாக பயன்படுத்தப்படும் மின்னியல் சிகரெட் என்றே கருதப்பட்டது.
ஆனால், காலப்போக்கில் அதன் பயன்பாடு தவறான முறையில் அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளதாக அவர் கூறினார்.
குறிப்பாக, 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கூட வேப் சிகரெட்டை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது கவலைக்குரியது.
இதன் காரணமாகவே, வேப் சிகரெட் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்புகள் மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
மலேசியாவில் இதற்கான முழுமையான சட்டம் இன்னும் நடைமுறைக்கு வராத நிலையில், பேரா மாநில அரசு தன்னால் முடிந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஜொகூர், கிளந்தான், கெடா உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்கனவே வேப் சிகரெட் விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளன.
சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. அதேபோன்று பேரா மாநிலத்திலும் வேப் சிகரெட் விற்பனையைத் தடுக்க முடிவு செய்தோம் என்றார்.
பேரா மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பின்னர், 2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் வேப் சிகரெட் விற்பனைக்கான புதிய வர்த்தக உரிமங்களை வழங்குவதையும், ஏற்கனவே உள்ள உரிமங்களை புதுப்பிப்பதையும் நிறுத்த முடிவு செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 21, 2026, 5:52 pm
இஸ்லாத்தை அவமதித்த சிங்கப்பூர் நாட்டு ஆடவருக்கு 14 நாட்கள் சிறை, RM 7,000 ரிங்கிட் அபராதம் விதிப்பு
August 21, 2026, 5:43 pm
பினாங்கு மிரட்டல் வழக்கு: பொது நடவடிக்கைப் படையைச் சேர்ந்த 10 காவலர்கள் கைது
August 21, 2026, 5:12 pm
சரவாக் மாநில கொடியை மிதித்த டிக் டாக் பயனர்: போலிஸ் தீவிர விசாரணை
August 21, 2026, 5:09 pm
தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு RAPID KL சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது
August 21, 2026, 3:34 pm
கிள்ளான் தெங்கு கிளானாவில் உள்ள நகைக்கடையில் கொள்ளை முயற்சி: போலிஸ் விசாரணை
August 21, 2026, 3:20 pm
ஃபெல்டா தொடர்பான விசாரணை அறிக்கை விரைவில் வெளியிடப்படும்: டத்தோஶ்ரீ அன்வார் தகவல்
August 21, 2026, 1:20 pm
