
செய்திகள் மலேசியா
பாதுகாப்பு அச்சுறுத்தல்: அண்டை நாடுகளின் ஒத்துழைப்பைக் கோர ஹிஷாமுடின் வலியுறுத்து
புத்ராஜெயா:
மலேசியா எதிர்கொள்ளும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை ஒடுக்குவதில் அண்டை நாடுகளின் வலுவான ஒத்துழைப்பும், ராஜதந்திர நடவடிக்கைகளும் தேவை என மூத்த தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
தேசிய எல்லைகளையும், பரந்து விரிந்துள்ள நீர்ப்பரப்பை பாதுகாப்பதிலும் ஆசியான் வட்டாரத்தில் உள்ள அண்டை நாடுகளுடன் தற்காப்பு துறை சார்ந்த ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.
இதை சாத்தியமாக்க, இன்றளவும் நடைமுறையில் உள்ள மலேசியா, இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ் ஆகிய மூன்று நாடுகள் இடையேயான முத்தரப்பு ஒத்துழைப்பு ஏற்பாடு ஒப்பந்தம், அடுத்த கட்டமாக மூன்று நாடுகளின் தற்காப்பு அமைச்சர்கள் மட்டத்திலான உடன்பாடாக மேம்பட வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
"எதிர்வரும் 27ஆம் தேதி சுரபாயா (இந்தோனீசியா) சென்று மற்ற இரு நாடுகளின் தற்காப்பு அமைச்சர்களுடன் ஆலோசிக்க உள்ளேன். அப்போது தற்காப்பு துறையில் ஒத்துழைப்பது தொடர்பாக இந்தோனீசியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளேன்.
"இரு நாடுகளுக்கும் இடையே இத்தகைய ஒப்பந்தம் கையெழுத்தாவது இதுவே முதல் முறை. இதற்கும் மேலதிகமாக, இரு நாடுகளுக்கு இடையேயான பொது எல்லைக்கான கமிட்டியின் கூட்டம் வரும் பிப்ரவரி மாதம் மலேசியாவில் நடைபெறும்," என்றார் அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைன்.
இதற்கிடையே, எதிர்வரும் 23ஆம் தேதி, ஃபிரான்ஸ் ஆயுதப்படைகளின் அமைச்சர் Florence Parly மலேசியாவுக்கு வருகை தர உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
May 23, 2022, 10:03 pm
உள்நாட்டு தேவைகளை பூர்த்தி செய்ய கோழி ஏற்றுமதிக்கு தடை: பிரதமர் அறிவிப்பு
May 23, 2022, 12:45 pm
பெர்லிஸ் மாநிலத்தில் பாஸ் இல்லாமல் தனியாக போட்டியிட அம்னோ, தே.மு. தயார்
May 23, 2022, 11:38 am
தாயும், மகனும் தூக்கிலிட்டு மாண்டனர்: ரவாங் குண்டாங்கில் சம்பவம்
May 23, 2022, 11:12 am
கோவிட்-19 தொற்றுக்கு இரண்டு பேர் பலி
May 23, 2022, 11:11 am
கோவிட்-19 தொற்றுக்கு 1,817 பேர் பாதிப்பு
May 23, 2022, 10:18 am
மக்கள் விரும்பினால் தேர்தல் களம் காண்பேன்: ஸுல்கிஃப்ளி அஹ்மத்
May 23, 2022, 9:49 am
மூவாரைச் சேர்ந்த முன்னாள் காவல்துறை அதிகாரி ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு
May 23, 2022, 9:40 am
உலக நாடுகள் மலேசியா மீது நம்பிக்கை இழந்துவிட்டன: அன்வார் குற்றச்சாட்டு
May 23, 2022, 9:28 am