செய்திகள் மலேசியா
தந்தை பெரியாரின் 52ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது
ஷாஆலம்:
மலேசிய திராவிடர் இயக்கத்தின் ஏற்பாட்டில் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 52ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி அண்மையில் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.
மனிதர்கள் பகுத்தறிவை வைத்து சுயமரியாதையுடன் வாழ வேண்டும் என்ற வழிக்காட்டலை உலகிற்கு சொன்னவர் தந்தை பெரியார்.
அவர் நம்மை விட்டு மறைந்திருந்தாலும் அவர் காட்டிய சுயமரியாதை வழிக்காட்டலும் கொள்கைகளும் இன்னமும் பின்பற்றப்பட்டு வருகின்றன என்று ஷா ஆலம் மாப்பிளை உணவக மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கழகத்தின் தேசிய பொதுச் செயலாளர் பொன்.பொன்வாசகம் பேசினார்.
கழகத்தின் தேசிய இளைஞர் பிரிவுத் தலைவர் பா. சோமசம்பந்தனார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை நெறியாளர் பொன்.வெண்முல்லை சிறப்பாக வழிநடத்தினார்.
தமிழ் வாழ்த்து மற்றும் கொள்கை பாடலுடன் தொடங்கிய நிகழ்ச்சியில்
முதல் அங்கமாக இளைஞர் மாணவர் படைப்பாக யு. இன்பகீரன், யு. இயல்வளவன் ஆகியோர் தங்களது படைப்புகளை வழங்கினர்.
அதனை தொடர்ந்து கழகத்தின் பொறுப்பாளர்களின் படைப்பாக
கவிதைகள், சிறப்புரை, கலந்துரையாடல், ஆத்திச்சூடி, ஓவியப் படைப்புகள் உள்ளிட்ட அங்கங்கள் இடம் பெற்றன.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் கழகத்தின் தேசியத் தலைவர் சா. இரா. பாரதி அன்பளிப்புகளை எடுத்து வழங்கினார்.
சிறப்பு நிகழ்ச்சியாக, மலேசிய திராவிடர் கழக காற்பந்து குழு அறிமுகம் செய்யப்பட்டு, அதன் விளையாட்டு சீருடையை தேசியத் தலைவர் அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 2, 2026, 10:15 pm
தனக்கு மிரட்டல்கள் வந்ததை கிளந்தான் போலிஸ் தலைவர் உறுதிப்படுத்தினார்
January 2, 2026, 10:11 pm
கம்போங் பாரு கலவரம்: போலிஸ் தலைவரை காயப்படுத்திய குற்றத்தை 16 வயது சிறுவன் ஒப்புக் கொண்டான்
January 2, 2026, 10:08 pm
ஈப்போவில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
January 2, 2026, 5:45 pm
பெற்றோரை வாளால் தாக்கிய மகன்
January 2, 2026, 4:36 pm
கொலை முயற்சி குற்றச்சாட்டு: இல்லத்தரசியும் அவரது ஆண் தோழனும் நீதிமன்றத்தில் ஆஜர்
January 2, 2026, 1:11 pm
