நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முஃபாகாத் நேஷனல் மீண்டும் உயிர்ப்பிப்பது அந்தந்த கட்சிகளை பொருத்தது; அரசாங்கம் இன்னும் நிலையாக உள்ளது: பிரதமர்

கோலாலம்பூர்:

அம்னோ, பாஸ் இடையேயான முஃபாகாட் நேஷனல் ஒத்துழைப்பை மீண்டும் உருவாக்குவதற்கான முயற்சிகள் குறித்த ஊகங்களை பிரதமர்  டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நிராகரித்தார்.

அதே நேரத்தில் எந்தவொரு முடிவும் அந்தந்த கட்சிகளைப் பொறுத்தது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் அடுத்த பொதுத் தேர்தல் வரை தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற உறுதிக் கொண்டுள்ளன.

இப்பிரச்சினை தீவிரமானது அல்ல, எனக்கு இன்னும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அது அவர்களின் முடிவுகள்.

ஆனால் இப்போது முக்கியமானது என்னவென்றால், ஒற்றுமை அரசாங்கம் இன்னும் அப்படியே உள்ளது.

மேலும் அனைவரும் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தி, அடுத்த பொதுத் தேர்தல் வரை மக்களின் தலைவிதியைப் பாதுகாக்க தங்கள் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

பெட்டாலிங் ஜெயாவில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset