செய்திகள் தமிழ் தொடர்புகள்
பிரதமர் மோடி அமைச்சரவையில் 20 பேர் இலாகா விரைவில் மாற்றம்: புதிதாக திமுகவும் இடம்பெற இருப்பதாக தகவல்
சென்னை:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் சுமார் 20-க்கும் மேற்பட்டோரின் இலாகா மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும், புதிதாக திமுகவும் இடம் பெற இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்த பின் திமுகவின் போக்கில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தொகுதி வரையறை மசோதாவை கடுமையாக எதிர்த்த திமுக, இப்போது அதற்கு ஆதரவளிக்க சில நிபந்தனைகளை விதித்தது.
மேலும் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடனான ஆலோசனைக் கூட்டத்தில் திமுக எம்.பி. கனிமொழி கலந்து கொண்டார். மாநிலங்களவை எம்.பி.யான கனிமொழியும் சோமுவும், அரசியலில் நிரந்தர எதிரிகள் இல்லை என கூறியிருந்தார்.
இதையடுத்து சமூகவலைதளங்களிலும் திமுக-பாஜக நெருக்கம் பற்றிய செய்திகள் விமர்சனங்களுடன் வெளியாகி வருகின்றன.
இதன் மீதான ஒரு கேள்விக்கு மக்களவை எம்.பி.யான கனிமொழி, பாஜகவுடன் எந்தக் கூட்டணியும் இல்லை என பதில் அளித்திருந்தார். எனினும், திமுக-பாஜக உறவு தொடர்பான பேச்சுக்கள் அடங்கியபாடில்லை.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 6, 2026, 5:41 pm
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
October 6, 2026, 11:29 am
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
October 5, 2026, 12:04 pm
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல்: தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளுக்கு இரு நாள்கள் விடுமுறை
October 4, 2026, 12:18 pm
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவுக்கு வாய்ப்பு
October 3, 2026, 5:00 pm
"ஆபாசம், வன்மம், வக்கிரம்...": ஸ்டாலினைக் வன்மையாகச் சாடிய விஜய்
October 1, 2026, 5:51 pm
தாராபுரத்தில் சத்தியபாமா காதில் அமைச்சர் ராஜ் மோகன் சொன்னது என்ன?: அமைச்சர் தன்னிலை விளக்கம்
September 30, 2026, 1:33 pm
பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்: புதிய தலைமைச் செயலகம் அமைக்க கடும் எதிர்ப்பு
September 29, 2026, 10:14 pm
2 நாளில் 9 கொலைகள் - ரீல்ஸ் ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதல்வர் விஜய்?: உதயநிதி கேள்வி
September 28, 2026, 5:43 pm
