நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தாவாவ் விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்: நபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 12 பிரம்படிகள்

கோத்தா கினாபாலு: 

தாவாவ் உயர் நீதிமன்றத்தில், ஆறு கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருளைக் கடத்திய குற்றத்தை ஒப்புக்கொண்ட 31 வயதான ஹி சியெங் காங் என்பவருக்கு ஆயுள் தண்டனையும் 12 பிரம்படிகளும் விதித்து நீதித்துறை ஆணையர் ஸ்டீவ் ரிடிகோஸ் தீர்ப்பளித்துள்ளார்.

இத்தண்டனை அவர் கைது செய்யப்பட்ட ஜூலை 30, 2024 முதல் அமலுக்கு வருகிறது.

கடந்த ஜூலை 30, 2024 அன்று தாவாவ் விமான நிலைய வருகை முனையத்தில், சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்துகொண்ட பிரதிவாதியின் கருப்பு நிறப் பையைச் சுங்கத்துறை அதிகாரி சோதனையிட்டார்.

ஸ்கேன் சோதனையில் அப்பையிலிருந்து 6,968.6 கிராம் மெத்தாம்பெட்டமைன் போதைப்பொருள் அடங்கிய நீல நிறப் பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டன.

இதனைத் தொடர்ந்து அவர் மீது அபாயகரமான போதைப்பொருள் சட்டம் 1952 பிரிவு 39B(1)(a)-இன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் அரசுத் தரப்பில் துணை அரசு வழக்கறிஞர் ஆரிஃப் முகமது ஷரீஃபும், குற்றவாளி சார்பாக வழக்கறிஞர் விவியன் தியேனும் ஆஜராகினர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset