செய்திகள் மலேசியா
1,700 ரிங்கிட் குறைந்தபட்ச ஊதியத்தை அரசு மறுபரிசீலனை செய்யவுள்ளது: டத்தோஸ்ரீ ரமணன்
புத்ராஜெயா:
1,700 ரிங்கிட் என்ற குறைந்தபட்ச ஊதிய விகிதத்தை அரசு மறுபரிசீலனை செய்து வருகிறது.
இந்தத் தொகையை அப்படியே பராமரிப்பதா அல்லது அதிகரிப்பதா என்பது குறித்த இறுதி முடிவை தேசிய ஊதியம் மற்றும் தற்காலிகப் பணி ஆலோசனைக் குழு எடுக்கும்.
தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளையும், முதலாளிகளின் நிதித் திறனையும் அளவிடுவதற்காக, வறுமைக் கோட்டு வருமானம் மற்றும் இடைநிலை ஊதியம் போன்ற அடிப்படைக் குறிகாட்டிகளை இந்த மறுபரிசீலனை கருத்தில் கொள்ளும் என்று மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன் கூறினார்.
பயனீட்டாளர்களின் விலைக் குறியீடு, தொழிலாளர் உற்பத்தித்திறன், வேலையின்மை விகிதம் ஆகியவற்றையும் இந்த மறுபரிசீலனை கருத்தில் கொள்ளும்.
இன்றுவரை, அமைச்சு வாழ்க்கை ஊதியம் குறித்து ஒரு குறிப்பிட்ட ஆய்வை நடத்தவில்லை.
இருப்பினும், பேங்க் நெகாரா 2018-ல், உதாரணமாக கோலாலம்பூரில் ஒரு தனி நபருக்கான வாழ்க்கை ஊதியத்தை 2,700 ரிங்கிட் என மதிப்பிட்டு, வாழ்க்கை ஊதியம் என்ற கருத்தை அறிமுகப்படுத்தியது.
புள்ளிவிவரத் துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட அடிப்படை வாழ்க்கை ஊதியத்தில், இருப்பிடம், மக்கள்தொகை மற்றும் உண்மையான குடும்பச் செலவின முறைகளுக்கு ஏற்ப விகிதங்கள் மிகவும் நுணுக்கமாக உள்ளன என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 18, 2026, 4:48 pm
தாவாவ் விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்: நபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 12 பிரம்படிகள்
August 18, 2026, 4:27 pm
கோலாலம்பூர் கோபுரம் சலுகை வழக்கு விசாரணை: 29 அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணைக்கு அழைக்கப்படுவர்
August 18, 2026, 3:42 pm
சூதாட்டம், மோசடி உள்ளடக்கங்களுக்கு முகநூல் பாவமான முதன்மை தளமாக உள்ளது: ஃபஹ்மி
August 18, 2026, 3:41 pm
நெகிரி செம்பிலான் சட்டமன்ற சபாநாயகராக அவலுடின் இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டார்
August 18, 2026, 3:41 pm
RTS LINK ரயில் போக்குவரத்து சேவை: சில நொடிகளில் குடிநுழைவுச் சோதனையை நிறைவு செய்ய புதிய திட்டம்
August 18, 2026, 1:40 pm
தாபோங் ஹாஜி விசாரணை தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கைக் காலத்திற்குள் அடங்காது: பிரதமர்
August 18, 2026, 1:39 pm
2026ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு அக்டோபர் 26இல் தொடங்குகிறது: கல்வியமைச்சு
August 18, 2026, 1:38 pm
