செய்திகள் மலேசியா
சூதாட்டம், மோசடி உள்ளடக்கங்களுக்கு முகநூல் பாவமான முதன்மை தளமாக உள்ளது: ஃபஹ்மி
புத்ராஜெயா:
மலேசியர்களுக்கு முகநூலை ஒரு பாவமான தளம் என்று தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் வர்ணித்தார்.
ஏனெனில் அது முறையே 78% இணையவழி சூதாட்டத்திற்கும் 53% மோசடி உள்ளடக்கத்திற்கும் பங்களிக்கிறது.
சூதாட்ட உள்ளடக்கம் தொடர்பான உள்ளடக்கத்தைக் குறைக்குமாறு அரசாங்கம் அந்தத் தளத்தைக் கேட்டுக்கொண்டுள்ளதாகவும், இது யூ டியூபை (18%), டிக்டாக்கை (4%) விட மிக அதிகமாக உள்ளது என்றும் அவர் கூறினார்.
மோசடி உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை முகநூல் மீண்டும் 53% உடன் முதலிடத்தில் உள்ளது, அதைத் தொடர்ந்து டிக்டாக் (39%), த்ரெட்ஸ் (5%) ஆகியவை உள்ளன.
மலேசியர்களை எந்தத் தளம் அதிகம் 'பாவம்' செய்கிறது என்று கூற வேண்டுமானால், ஆன்லைன் சூதாட்டத்தைப் பொறுத்தவரை முகநூல் தான் முதலிடம் வகிக்கிறது.
மோசடிகளைப் பொறுத்தவரையிலும், 53% உடன் முகநூல் தான் முதலிடத்தில் உள்ளது என்று புத்ராஜயாவில் அவர் கூறினார்.
இதற்கிடையில், ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 17 வரையிலான காலகட்டத்தில், மொத்தம் 470,593 உள்ளடக்கங்களை நீக்குமாறு கோரப்பட்டதாகவும், அதில் 436,661 உள்ளடக்கங்கள், அதாவது 93%, சம்பந்தப்பட்ட தளங்களால் நீக்க ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும் ஃபஹ்மி கூறினார்.
மொத்தத்தில், 64% சூதாட்ட உள்ளடக்கம் என்றும், மீதமுள்ள 27% மோசடிகள் என்றும் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 18, 2026, 4:48 pm
தாவாவ் விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்: நபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 12 பிரம்படிகள்
August 18, 2026, 4:27 pm
கோலாலம்பூர் கோபுரம் சலுகை வழக்கு விசாரணை: 29 அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணைக்கு அழைக்கப்படுவர்
August 18, 2026, 3:41 pm
நெகிரி செம்பிலான் சட்டமன்ற சபாநாயகராக அவலுடின் இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டார்
August 18, 2026, 3:41 pm
RTS LINK ரயில் போக்குவரத்து சேவை: சில நொடிகளில் குடிநுழைவுச் சோதனையை நிறைவு செய்ய புதிய திட்டம்
August 18, 2026, 1:40 pm
தாபோங் ஹாஜி விசாரணை தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கைக் காலத்திற்குள் அடங்காது: பிரதமர்
August 18, 2026, 1:39 pm
2026ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு அக்டோபர் 26இல் தொடங்குகிறது: கல்வியமைச்சு
August 18, 2026, 1:38 pm
ஜிஎஸ்டி, எஸ்எஸ்டி ஆகியவற்றை ஒருங்கிணைப்பது குறித்த ஆய்வுக்கு அரசு தயாராக உள்ளது: பிரதமர்
August 18, 2026, 1:04 pm
