நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூர் கோபுரம் சலுகை வழக்கு விசாரணை: 29 அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணைக்கு அழைக்கப்படுவர்

கோலாலம்பூர்: 

கோலாலம்பூர் கோபுரத்தின் மேலாண்மை சலுகையைக் கைப்பற்றுவதற்காக, உயர்நீதிமன்ற நீதிபதி நூர் ருவேனா முன்னிலையில் நடைபெற்ற வழக்கு மேலாண்மையின் போது, அரசுத் தரப்பு துணை அரசு வழக்கறிஞர் நுருல் கிஸ்டினி இத்தகவலைத் தெரிவித்தார்.

மேலும், வழக்கு தொடர்பான இறுதி ஆவணங்கள் எதிர் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டதாகவும் உறுதி செய்யப்பட்டது.

இவ்வழக்கின் அடுத்தகட்ட மேலாண்மைக்காக வரும் நவம்பர் 30-ஆம் தேதியை நீதிபதி நிர்ணயித்துள்ளார்.

ஏற்கனவே 2027-ஆம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மற்றும் ஜூன் மாதங்களில் விசாரணை நடத்த அட்டவணைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது 2027 ஜூன் 24, 28, 29 மற்றும் 30 ஆகிய புதிய தேதிகளையும் நீதிமன்றம் ஒதுக்கியுள்ளது.

2022 ஜூலை முதல் ஆகஸ்ட் வரையிலான காலக்கட்டத்தில் புத்ராஜெயாவில் உள்ள அமைச்சகத்தில் இந்த லஞ்சக் குற்றச்செயல் நடந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் ஹைட்ரோஷாப் நிறுவனத்தின் இயக்குனர் அப்துல் ஹமீத் ஷேக் மீது மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டத்தின்  கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது லஞ்சத் தொகையைக் காட்டிலும் 5 மடங்கு அபராதம் விதிக்கப்படலாம்.

மேலும், அவரது ஹைட்ரோஷாப் நிறுவனத்தின் மீதும் தனியாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள நிலையில், அதற்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை அல்லது 1 மில்லியன் ரிங்கிட் வரை அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset