செய்திகள் மலேசியா
ஜிஎஸ்டி, எஸ்எஸ்டி ஆகியவற்றை ஒருங்கிணைப்பது குறித்த ஆய்வுக்கு அரசு தயாராக உள்ளது: பிரதமர்
புத்ராஜெயா:
சரக்கு, சேவை வரியின் (ஜிஎஸ்டி) கூறுகளை விற்பனை, சேவை வரியுடன் (எஸ்எஸ்டி) ஒருங்கிணைப்பது குறித்து ஆய்வு நடத்த அரசு தயாராக உள்ளது.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று இதனை தெரிவித்தார்.
மேலும் முற்போக்கான வரி முறையை நிறுவும் பொருட்டு இந்த முன்மொழிவு பரிசீலிக்கத்தக்கது என்று நிதி அமைச்சராகவும் இருக்கும் அவர் கூறினார்.
இங்குள்ள நிதி அமைச்சின் தலைமையகத்தில் 2027 ஆம் ஆண்டுக்கான கூட்டாட்சி வரவுசெலவுத் திட்டம் குறித்த கலந்துரையாடலுக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.
பல கட்ட நுகர்வு வரியான ஜிஎஸ்டி, ஏப்ரல் 2015 இல் 6% என்ற விகிதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு, ஜூன் 2018 இல் பூஜ்ஜிய விகிதமாக மாற்றப்பட்டது.
அப்போதைய பக்கத்தான் ஹரப்பான் தலைமையிலான நிர்வாகத்தின் தேர்தல் அறிக்கைக்கு இணங்க, செப்டம்பர் 2018 இல் இது எஸ்எஸ்டியால் மாற்றப்பட்டது.
ஜிஎஸ்டியை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைகளை அரசு பலமுறை நிராகரித்துள்ளது. மலேசியாவின் சராசரி ஊதியம் 4,000 ரிங்கிட்டை தாண்டும் போது மட்டுமே இது பரிசீலிக்கப்படும்.
தற்போது நாட்டின் சராசரி மாத ஊதியம் சுமார் 2,800 ரிங்கிட்டாக உள்ளது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 18, 2026, 4:48 pm
தாவாவ் விமான நிலையத்தில் போதைப்பொருள் கடத்தல்: நபருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 12 பிரம்படிகள்
August 18, 2026, 4:27 pm
கோலாலம்பூர் கோபுரம் சலுகை வழக்கு விசாரணை: 29 அரசுத் தரப்பு சாட்சிகள் விசாரணைக்கு அழைக்கப்படுவர்
August 18, 2026, 3:42 pm
சூதாட்டம், மோசடி உள்ளடக்கங்களுக்கு முகநூல் பாவமான முதன்மை தளமாக உள்ளது: ஃபஹ்மி
August 18, 2026, 3:41 pm
நெகிரி செம்பிலான் சட்டமன்ற சபாநாயகராக அவலுடின் இரண்டாவது முறையாக நியமிக்கப்பட்டார்
August 18, 2026, 3:41 pm
RTS LINK ரயில் போக்குவரத்து சேவை: சில நொடிகளில் குடிநுழைவுச் சோதனையை நிறைவு செய்ய புதிய திட்டம்
August 18, 2026, 1:40 pm
தாபோங் ஹாஜி விசாரணை தொடர்பான அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கைக் காலத்திற்குள் அடங்காது: பிரதமர்
August 18, 2026, 1:39 pm
2026ஆம் ஆண்டுக்கான எஸ்பிஎம் தேர்வு அக்டோபர் 26இல் தொடங்குகிறது: கல்வியமைச்சு
August 18, 2026, 1:04 pm
