செய்திகள் விளையாட்டு
சிலாங்கூர் சுக்மா, பாரா சுக்மா போட்டிகளை சிலாங்கூர் பட்டத்து இளவரசர் தொடக்கி வைத்தார்
ஷாஆலம்:
சிலாங்கூர் சுக்மா, பாரா சுக்மா விளையாட்டு போட்டிகளை சிலாங்கூர் பட்டத்து இளவரசர் தெங்கு அமீர் ஷா தொடக்கி வைத்தார்.
இந்த இரண்டு போட்டிகளையும் நேற்று இரவு இங்குள்ள டத்தாரான் ஷா ஆலமில் பெரும் ஆரவாரத்துடன் அவர் தொடக்கி வைத்தார்.
28 ஆண்டுகளுக்குப் பிறகு சிலாங்கூரில் தேசிய விளையாட்டு நிகழ்வு மீண்டும் ஏற்று நடத்துகிறது.
பட்டத்து இளவரசரை சிலாங்கூர் மந்திரி புசார், டத்தோஸ்ரீ அமிருதின் ஷாரி வரவேற்றார்.
இளைஞர், விளையாட்டு அமைச்சர் டாக்டர் முகமது தௌபிக் ஜொஹாரி, மாநில இளைஞர், விளையாட்டுத் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் முகமது நஜ்வான் ஹலிமி ஆகியோரும் உடன் இருந்தனர்.
இந்த போட்டியில் நாடு முழுவதிலுமிருந்து 5,000க்கும் மேற்பட்ட இளம் விளையாட்டு வீரர்கள், ஆகஸ்ட் 24 வரை நடைபெறும் 37 வகையான விளையாட்டுகளில் 468 தங்கப் பதக்கங்களுக்காகப் போட்டியிடுவார்கள்.
சிலாங்கூரைப் பொறுத்தவரை, மேடையில் யார் முதலிடம் பிடிக்கிறார்கள் என்பதை மட்டும் கொண்டு சிறப்பை அளவிட முடியாது.
மாறாக நாம் எந்த அளவிற்கு வாய்ப்புகளை வழங்குகிறோம். ஒவ்வொருவரின் திறமைகளையும் மதிக்கிறோம்.
மேலும் ஒவ்வொரு திறமைக்கும் வளர்வதற்கான வாய்ப்பை உறுதி செய்கிறோம் என்பதைக் கொண்டும் சிறப்பானது அளவிடப்பட வேண்டும்.
மனிதத் திறனை உடல் வரம்புகளைக் கொண்டு மட்டுமே மதிப்பிட முடியாது என்பதை மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் நமக்குக் காட்டுகிறார்கள் என்று சிலாங்கூர் மந்திரி புசார் தனது உரையில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 16, 2026, 12:23 pm
Asia Figure Skating போட்டியில் சரண்யா டத்தோ கிஷோர்குமார் தங்கம் வென்று சாதனை
August 16, 2026, 11:08 am
மென்செஸ்டர் யுனைடெட்டின் செயல்பாடு போதுமானதாக இல்லை: மைக்கல் கேரிக் ஒப்புக்கொண்டார்
August 15, 2026, 10:21 am
36 வயதில் இமொபிலே ஓய்வை அறிவித்தார்
August 15, 2026, 9:49 am
சொத்து கொடுக்க முடியாது: திருமணத்தின் போதே மனைவியுடன் விவாகரத்து ஒப்பந்தம் போட்ட ரொனால்டோ
August 14, 2026, 3:48 pm
கனடியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்ற இகா ஸ்வியாடெக்
August 14, 2026, 9:28 am
மென்செஸ்டர் யுனைடெட் தொடர்ந்து செலவு செய்ய வேண்டும்: கேரிக் விருப்பம்
August 14, 2026, 9:08 am
வியட்நாமுக்கு எதிராக 200 சதவிகித செயல் திறனை வெளிப்படுத்த வேண்டும்: பவித்ரன்
August 13, 2026, 10:33 am
தந்தையை இழந்த மெஸ்ஸிக்கு ஆறுதல் சொன்ன ரொனால்டோ
August 13, 2026, 10:18 am
