செய்திகள் விளையாட்டு
Asia Figure Skating போட்டியில் சரண்யா டத்தோ கிஷோர்குமார் தங்கம் வென்று சாதனை
சன்வே:
21 வயதிலேயே ACCA படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்து, தற்போது தணிக்கையாளராக பணியாற்றி வரும் சரண்யா டத்தோ கிஷோர்குமார் தனது தொழில், கல்விப் பொறுப்புகளுக்கு மத்தியில், Skate Asia 2026 Figure Skating போட்டியில் பங்கேற்று Artistic F5 பிரிவில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
Sunway Pyramid Ice-ல் நடைபெற்ற இப்போட்டியில் தங்கம் வென்றிருப்பது, அவரது திறமை, அர்ப்பணிப்பு, விடாமுயற்சிக்கு சிறந்த எடுத்துக் காட்டாகும்.
கல்வி, தொழில் வாழ்க்கையில் முன்னேறுவதுடன், பகுதி நேரமாக Figure Skating பயிற்சியாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
ஒரே நேரத்தில் படிப்பு, தொழில், விளையாட்டு மற்றும் பயிற்சி என பல பொறுப்புகளைச் சமநிலைப்படுத்தி, சர்வதேச அளவிலான போட்டியில் தங்கம் வென்றிருப்பது உண்மையிலேயே பாராட்டுக்குரிய சாதனையாகும்.
21 வயதில் ACCA பட்டம், Auditor பணியுடன் Figure Skating போட்டியில் தங்கப் பதக்கம், மேலும் பகுதி நேர Coach — சரண்யாவின் இந்தப் பயணம் இளம் தலைமுறைக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாக திகழ்கிறது.
அவரது சாதனைகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 16, 2026, 11:08 am
மென்செஸ்டர் யுனைடெட்டின் செயல்பாடு போதுமானதாக இல்லை: மைக்கல் கேரிக் ஒப்புக்கொண்டார்
August 16, 2026, 11:06 am
சிலாங்கூர் சுக்மா, பாரா சுக்மா போட்டிகளை சிலாங்கூர் பட்டத்து இளவரசர் தொடக்கி வைத்தார்
August 15, 2026, 10:21 am
36 வயதில் இமொபிலே ஓய்வை அறிவித்தார்
August 15, 2026, 9:49 am
சொத்து கொடுக்க முடியாது: திருமணத்தின் போதே மனைவியுடன் விவாகரத்து ஒப்பந்தம் போட்ட ரொனால்டோ
August 14, 2026, 3:48 pm
கனடியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்ற இகா ஸ்வியாடெக்
August 14, 2026, 9:28 am
மென்செஸ்டர் யுனைடெட் தொடர்ந்து செலவு செய்ய வேண்டும்: கேரிக் விருப்பம்
August 14, 2026, 9:08 am
வியட்நாமுக்கு எதிராக 200 சதவிகித செயல் திறனை வெளிப்படுத்த வேண்டும்: பவித்ரன்
August 13, 2026, 10:33 am
தந்தையை இழந்த மெஸ்ஸிக்கு ஆறுதல் சொன்ன ரொனால்டோ
August 13, 2026, 10:18 am
