நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்கேசோவின் 24 மணி நேரப் பாதுகாப்புத் திட்டம் கட்டங்களாகச் செயல்படுத்தப்படும்; அதிகபட்ச பங்களிப்பு 1.25 சதவீதம்: எட்மண்ட்

கோலாலம்பூர்:

பெர்கேசோவின் 24 மணி நேரப் பாதுகாப்புத் திட்டம் கட்டங்களாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

இதன் பங்களிப்பு விகிதம் 0.75 சதவீதத்தில் தொடங்கி, ஆறாம் ஆண்டில் அதிகபட்சமாக 1.25 சதவீதமாக அதிகரிக்கும்.

பெர்கேசோவின் வியூக, நிறுவன பிரிவின் துணை தலைமை நிர்வாகி எட்மண்ட் சியோங் பெக் ஹுவாங் இதனை கூறினார்.

இந்தத் திட்டம் திடீரென செயல்படுத்தப்படவில்லை.

மாறாக 2017 முதல் நடைபெற்ற கலந்துரையாடல் செயல்முறையின் மூலம், கடந்த ஆண்டு டிசம்பரில் மக்களவையால்அங்கீகரிக்கப்பட்டது.

தற்போதைய 48 சதவீத வருமான மாற்றுப் பலன்கள் 80 சதவீதம் வரை அதிகரிக்கப்படுவதற்கேற்ப, ஆறாவது ஆண்டில் இந்த விகிதம் 1.25 சதவீதமாக உயர்த்தப்படும் என்று அவர் கூறினார்.

பெர்கேசோ ஐ-லிண்டுங் 2026 ஊடக விருதுகள் அறிவிப்புக்குப் பிறகு இன்று அவர் இவ்வாறு கூறினார்.

இந்த படிப்படியான அணுகுமுறை, குறிப்பாகக் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி நீண்டகால சிகிச்சை தேவைப்படும் தொழிலாளர்களுக்கு, மருத்துவ, மறுவாழ்வுப் பலன்கள் வரம்பற்றதாகத் தொடரவும் வழிவகுக்கிறது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset