செய்திகள் விளையாட்டு
சொத்து கொடுக்க முடியாது: திருமணத்தின் போதே மனைவியுடன் விவாகரத்து ஒப்பந்தம் போட்ட ரொனால்டோ
லிஸ்பன்:
உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, தனது நீண்டகால காதலியான ஜார்ஜினா ரோட்ரிக்ஸை ரகசியமாக திருமணம் செய்துகொண்டார்.
குடும்பத்தினர், மிக நெருங்கிய நண்பர்கள் மட்டுமே பங்கேற்ற இந்த திருமணத்தில் செய்யப்பட்டுள்ள சிறப்பு சொத்து பிரிவினை ஒப்பந்தம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
அதில் விவகாரத்து ஏற்பட்டால் என்னென்ன சொத்துக்கள், ஜீவனாம்சம் வழங்கப்படும் என்ற விவரமும் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
ரொனால்டோ பல ஆண்டுகளாக திருமணம் செய்யாமல் ஜார்ஜினாவுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். இவர்களுக்கு 5 குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில், இவர்கள் இருவருக்கும் ஆகஸ்ட் 11 அன்று திருமணம் நடைபெற்றது.
இந்த எளிய திருமணத்தில் ரொனால்டோ, ஜார்ஜினாவின் 5 குழந்தைகள் மட்டுமே முன்னிலையில் இருந்தனர்.
போர்த்துகல் தேசிய அணி வீரர்கள் அல்லது அல்-நசர் கிளப் வீரர்கள் என எந்தவொரு பிரபலமும் இதில் கலந்து கொள்ளவில்லை.
ரொனால்டோவின் நீண்டகால நண்பர் மிகுவல் பைக்சாவோ, ஜார்ஜினாவின் சகோதரி இவானா ஆகியோர் சாட்சிகளாக கையெழுத்திட்டுள்ளனர்.
மேலும், இருவரும் தங்களது குடும்பப் பெயர்களை மாற்றிக் கொள்ளவில்லை.
போர்த்துகல் சட்ட விதிகளின்படி 'சொத்து பிரிவினை' ஒப்பந்தத்தின் கீழ் இருவரும் திருமண பதிவை மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தின்படி, இருவரின் தனிப்பட்ட சொத்துக்கள், வருமானம் மற்றும் முதலீடுகள் முழுமையாக அவரவர் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.
எதிர்காலத்தில் ஒருவேளை விவாகரத்து ஏற்பட்டாலும் சொத்துக்கள் தானாகப் பிரிக்கப்படாது.
மேலும் ரொனால்டோவுடனான உறவை முறித்துக் கொண்டால் ஜார்ஜினாவுக்கு மாதத்திற்கு 470,000 ரிங்கிட் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 10:04 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் தோல்வி
September 5, 2026, 9:54 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் வெற்றி
September 4, 2026, 10:18 am
அனைத்துலக கால்பந்து வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற விரும்பும் பரேடெஸ் பிபா தடையை ஏற்க மறுக்கிறார்
September 4, 2026, 10:00 am
மெஸ்ஸிக்கு அர்ஜெண்டினா சிறப்பு மரியாதையை செலுத்துகிறது
September 3, 2026, 9:33 am
வீரர்கள் பரிமாற்ற சாதனையை மென்செஸ்டர் சிட்டி முறியடித்தது
September 3, 2026, 9:28 am
கடத்தல் சதித்திட்டத்தின் 26 முக்கிய நபர் இலக்குகளில் கிளையன் எம்பாப்பேவும் ஒருவர்
September 2, 2026, 8:35 am
பெர்னாண்டஸை 682.6 மில்லியன் ரிங்கிட்டுக்கு மென்செஸ்டர் சிட்டி ஒப்பந்தம் செய்தது
September 2, 2026, 8:32 am
மெஸ்ஸியின் மரபு என்றென்றும் நிலைத்திருக்கும்: பெக்காம்
September 1, 2026, 12:34 pm
ஒலிம்பிக் போட்டியில் அஸிசூல்ஹஸ்னி தங்கம் வெல்வார்: இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சு நம்பிக்கை
September 1, 2026, 10:42 am
