நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தோனேசியாவில் கைதான விமானி 2024 முதல் பல நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்தி வந்ததாக நம்பப்படுகிறது: ஹுசைன் ஓமார்

கோலாலம்பூர்:

கடந்த மாதம் இந்தோனேசியாவில் சுமார் 25 கிலோகிராம் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானி, 2024 முதல் பலமுறை மலேசியாவிலிருந்து பல நாடுகளுக்கு போதைப்பொருளைக் கடத்தியதாக நம்பப்படுகிறது.

புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குனர் டத்தோ ஹுசைன் ஓமார் கான் இதனை கூறினார்.

அவர் கடந்த 2024 முதல் தனது விமானப் பயண அட்டவணைப்படி, நாட்டிலிருந்து பல இடங்களுக்கு போதைப்பொருளைக் கடத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இது முதல் முறையல்ல. ஏனெனில் அவர் பலமுறை பல நாடுகளுக்கு போதைப்பொருளைக் கடத்தியுள்ளார்  என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

மலேசியா, இந்தோனேசியா உள்ளிட்ட பிற நாடுகளில் உள்ள பல போதைப்பொருள் கும்பல்கள் பற்றிய தகவல்களையும் இந்த முன்னோட்டத் திட்டம் வெளிப்படுத்தியதாக ஹுசைன் கூறினார்.

அடையாளம் காணப்பட்ட கும்பல் உறுப்பினர்கள் குறித்தும், போதைப்பொருள் விற்பனை தொடர்பான நிதிப் பரிமாற்றங்கள் குறித்தும் போலிஸ் மேலும் விசாரிக்கும்.

இந்த சர்வதேச கும்பல் வலையமைப்பு பற்றிய தகவல்கள், சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள போதைப்பொருள் தடுப்பு முகமைகளுக்கும் அனுப்பப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset