நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முன்னாள் தாபோங் ஹாஜி தலைவர் அப்துல் அஜீஸ் எம்ஏசிசியால் கைது செய்யப்படவில்லை: மகன்

கோலாலம்பூர்:

முன்னாள் தாபோங் ஹாஜி தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் அஜீஸ் எம்ஏசிசியால் கைது செய்யப்படவில்லை.

அவரின் மகன் முகமது கைருல் அஸ்மான் அப்துல் அஜீஸ் இதனை உறுதிப்படுத்தினார்.

பாலிங் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அப்துல் அஜீஸ் நேற்று இரவு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

இந்த கூற்றுகளை நிராகரித்துள்ள அவத் இன்று முகநூலில் ஒரு பதிவின் மூலம்,

தனது தந்தை தற்போது தங்கள் இல்லத்தில் ஓய்வெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், தாபோங் ஹாஜி அரச விசாரணை ஆணையத்தின்  அறிக்கை தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டதாகப் பரவி வரும் ஆதாரமற்ற செய்திகளை அவர் மறுத்துள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset