செய்திகள் மலேசியா
மலாக்கா தேர்தல்; ஒரு தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பாளரை மஇகா இன்னும் இறுதி செய்யவில்லை: டத்தோஸ்ரீ சரவணன்
தாப்பா:
வரவிருக்கும் மலாக்கா மாநிலத் தேர்தலில் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒரேயொரு மாநில சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை மஇகா இன்னும் இறுதி செய்யவில்லை.
மஇகா துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
எதிர்காலத்தில் ஒரு முடிவு எடுக்கப்படுவதற்கு முன்பு, போட்டியிடத் தகுதியான வேட்பாளர்களைத் தனது கட்சி இன்னும் மதிப்பீடு செய்து வருகிறது.
போட்டியிடத் தகுதியுள்ள வேட்பாளர்களை கட்சியின் தேசியய் தலைவர் மதிப்பீடு செய்து வருகிறார்.
மேலும் மஇகா விரைவில் முடிவெடுக்கும்.
என்னைப் பொறுத்தவரை, வாக்காளர்களை, குறிப்பாக 'வெள்ளை' வாக்காளர் குழுவினரை அடையாளம் காண்பதிலும், தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளைக் கண்டறிவதிலும் கவனம் செலுத்துவதன் மூலம் மலாக்கா தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கியுள்ளன.
தற்போதைக்கு, நாங்கள் அடையாளம் காணும் பணியைத் தொடங்கியுள்ளோம். வாக்காளர்களை, குறிப்பாக 'வெள்ளை' வாக்காளர் குழுவினரை அடையாளம் காண்பதிலும், எதிர்காலத்தில் தீர்க்கப்பட வேண்டிய அல்லது தீர்க்கப்பட்டு வரும் பிரச்சினைகளைக் கண்டறிவதிலும் நாங்கள் அதிக கவனம் செலுத்துகிறோம்.
தாப்பா மகாத்மா காந்தி மண்டபத்தில், நாடாளுமன்றத் தொகுதி மாணவர்களுக்கான மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியை நிறைவு செய்த பின்னர் அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 16, 2026, 3:48 pm
உண்மை, நீதி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டம் தொடர வேண்டும்: அமைச்சர் முஹம்மது சாபு
August 16, 2026, 12:56 pm
முன்னாள் தாபோங் ஹாஜி தலைவர் அப்துல் அஜீஸ் எம்ஏசிசியால் கைது செய்யப்படவில்லை: மகன்
August 16, 2026, 12:55 pm
சமூக நீதி, தேசிய வளர்ச்சிக்கான முதன்மை செயல்திட்டமாக மனநலப் பாதுகாப்பை உருவாக்க வேண்டும்: குணராஜ்
August 16, 2026, 12:22 pm
ஜசெக தேசிய மாநாடு; மலாய் வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதே ஜசெகவுக்கு மிகப்பெரிய சவால்: அந்தோனி லோக்
August 16, 2026, 12:21 pm
ஜசெக தேசிய மாநாடு; இன்றைய தினத்திற்கு நாம் ஒரு முடிவை எடுக்க வேண்டும்: கோவிந்த் சிங்
August 16, 2026, 11:18 am
