செய்திகள் மலேசியா
நாடாளுமன்றம் கலைக்கப்படும் வரை காத்திருக்க வேண்டாம்; தேர்தலுக்காக எப்போதும் தயாராக இருங்கள்: PKR உறுப்பினர்களிடம் ஃபத்லினா வலியுறுத்தல்
ஷா ஆலம்:
PKR மகளிர் பிரிவுத் தலைவரும் கல்வி அமைச்சருமான ஃபத்லினா சிடெக், தொடர்ச்சியான தேர்தல் தயார்நிலையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மலேசிய அரசியல் களத்தின் கணிக்க முடியாத தன்மையையும், கட்சி நிலவரங்களைப் பொருட்படுத்தாமல் மீள்திறன் அவசியம் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
PKR தேசிய மாநாட்டில் உரையாற்றிய அவர், கட்சிக்குள் பெண்களைத் தலைமை, முடிவெடுக்கும் பொறுப்புகளில் ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
மேலும், ஆளுகையை மேம்படுத்துவதற்கு ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.
அவரது கருத்துக்கள், கட்சி தன்னை உள்ரீதியாக வலுப்படுத்திக் கொள்வதில் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும், மக்கள் செல்வாக்கைத் தேடுவதைத் தாண்டி நாட்டின் நலனுக்காகச் செயல்பட வேண்டிய அதன் தலைமையின் பொறுப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டின.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 16, 2026, 3:48 pm
உண்மை, நீதி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான போராட்டம் தொடர வேண்டும்: அமைச்சர் முஹம்மது சாபு
August 16, 2026, 12:56 pm
முன்னாள் தாபோங் ஹாஜி தலைவர் அப்துல் அஜீஸ் எம்ஏசிசியால் கைது செய்யப்படவில்லை: மகன்
August 16, 2026, 12:55 pm
சமூக நீதி, தேசிய வளர்ச்சிக்கான முதன்மை செயல்திட்டமாக மனநலப் பாதுகாப்பை உருவாக்க வேண்டும்: குணராஜ்
August 16, 2026, 12:22 pm
ஜசெக தேசிய மாநாடு; மலாய் வாக்காளர்களின் ஆதரவைப் பெறுவதே ஜசெகவுக்கு மிகப்பெரிய சவால்: அந்தோனி லோக்
August 16, 2026, 12:21 pm
ஜசெக தேசிய மாநாடு; இன்றைய தினத்திற்கு நாம் ஒரு முடிவை எடுக்க வேண்டும்: கோவிந்த் சிங்
August 16, 2026, 11:18 am
