செய்திகள் தமிழ் தொடர்புகள்
தகைசால் தமிழர் விருது காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு முதல்வர் விஜய் வழங்கினார்
சென்னை:
சுதந்திர தின விழாவில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருதை முதல்வர் விஜய் வழங்கினார். பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு அப்துல் கலாம், கல்பனா சாவ்லா விருதுகளையும் வழங்கினார்.
சென்னை கோட்டையில் நேற்று நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் இந்த ஆண்டுக்கான விருதுகள், சிறப்பு பரிசுகளை முதல்வர் விஜய் வழங்கினார். அந்த வகையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான எம்.கிருஷ்ணசாமிக்கு ரூ.10 லட்சம் விருது தொகை, சான்றிதழுடன் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டது.
கலாம், கல்பனா சாவ்லா விருது: சர்க்கரை நோயியல் துறை சிறப்பு நிபுணர் வி.மோகனுக்கு டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருதும், நவுஷீன் பானு சந்த்துக்கு துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருதுடன், தலா ரூ.5 லட்சம் பரிசுத் தொகை, பதக்கங்களும் வழங்கப்பட்டன.
நல்ஆளுமை விருதுகள்: பின்னர், பல்வேறு பிரிவுகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியவர்களுக்கு முதல்வரின் நல்ஆளுமை விருதுகள் வழங்கப்பட்டன.
அந்த வகையில், குழந்தைப் பருவத்தில் காணப்படும் வளர்ச்சிக் குறைபாட்டைக் கண்டறிந்து, ஒருங்கிணைந்த அணுகுமுறை மூலம் தீர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக நீலகிரி ஆட்சியர் லட்சுமி பவ்யா தன்னீரு, மெட்ரோ ரயில் நிலையங்களில் இயந்திரமயமாக்கப்பட்ட தூய்மைப் பணிச் சேவைகளுக்காக சென்னை மெட்ரோ ரயில் நிறுவன பொது மேலாளர் எஸ்.சதீஷ் பிரபு, எடை குறைந்த செயற்கை உறுப்புகளை தயாரித்ததற்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை டீன் எம்.கீதாஞ்சலி ஆகியோருக்கு நல்ஆளுமை விருதுகள் வழங்கப்பட்டன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 6, 2026, 5:41 pm
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
October 6, 2026, 11:29 am
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
October 5, 2026, 12:04 pm
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல்: தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளுக்கு இரு நாள்கள் விடுமுறை
October 4, 2026, 12:18 pm
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவுக்கு வாய்ப்பு
October 3, 2026, 5:00 pm
"ஆபாசம், வன்மம், வக்கிரம்...": ஸ்டாலினைக் வன்மையாகச் சாடிய விஜய்
October 1, 2026, 5:51 pm
தாராபுரத்தில் சத்தியபாமா காதில் அமைச்சர் ராஜ் மோகன் சொன்னது என்ன?: அமைச்சர் தன்னிலை விளக்கம்
September 30, 2026, 1:33 pm
பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்: புதிய தலைமைச் செயலகம் அமைக்க கடும் எதிர்ப்பு
September 29, 2026, 10:14 pm
2 நாளில் 9 கொலைகள் - ரீல்ஸ் ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதல்வர் விஜய்?: உதயநிதி கேள்வி
September 28, 2026, 5:43 pm
