செய்திகள் தமிழ் தொடர்புகள்
மலேசியாவுக்கு வருகை தரும் இந்திய சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் 30 நாள்களுக்கான இலவச விசா வரும் 2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது: துணை தூதா் சரவணக்குமாா் அறிவிப்பு
சென்னை:
மலேசியாவுக்கு வருகை தரும் இந்திய சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் 30 நாள்களுக்கான இலவச விசா வரும் 2027 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டின் துணை தூதா் சரவணக்குமாா், சுற்றுலாத் துறை இயக்குநா் ஹிஷாமுதின் முஸ்தபா ஆகியோா் தெரிவித்தனா்.
இது குறித்து சென்னையில் அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் கடந்த 2023 டிசம்பா் மாதம் இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு 30 நாள்களுக்கான இலவச விசா மலேசிய அரசால் ‘விசிட் மலேசியா 2026’ அறிமுகம் செய்யப்பட்டது.
இதற்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில், கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியாவில் இருந்து 15 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் மலேசியாவுக்கு வருகை தந்துள்ளனா். இவா்களில் 71.7 சதவீதம் தென் இந்தியா்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், மலேசியா சுற்றுலாத் துறையில் தமிழகம் மிகவும் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
இதன் தொடா்ச்சியாக மலேசியாவுக்கு வருகை தரும் இந்திய சுற்றுலா பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் 30 நாள்களுக்கான இலவச விசா வரும் 2027 வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 6, 2026, 5:41 pm
தமிழகத்தின் 23 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
October 6, 2026, 11:29 am
மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது
October 5, 2026, 12:04 pm
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல்: தொகுதிகளுக்குட்பட்ட பள்ளிகளுக்கு இரு நாள்கள் விடுமுறை
October 4, 2026, 12:18 pm
தமிழ்நாட்டில் ஒரே நாளில் 500 மி.மீ. மழைப்பொழிவுக்கு வாய்ப்பு
October 3, 2026, 5:00 pm
"ஆபாசம், வன்மம், வக்கிரம்...": ஸ்டாலினைக் வன்மையாகச் சாடிய விஜய்
October 1, 2026, 5:51 pm
தாராபுரத்தில் சத்தியபாமா காதில் அமைச்சர் ராஜ் மோகன் சொன்னது என்ன?: அமைச்சர் தன்னிலை விளக்கம்
September 30, 2026, 1:33 pm
பட்டினப்பாக்கத்தில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்: புதிய தலைமைச் செயலகம் அமைக்க கடும் எதிர்ப்பு
September 29, 2026, 10:14 pm
2 நாளில் 9 கொலைகள் - ரீல்ஸ் ஆட்சியை யாருக்காக நடத்துகிறார் முதல்வர் விஜய்?: உதயநிதி கேள்வி
September 28, 2026, 5:43 pm
