செய்திகள் மலேசியா
சிலாங்கூர் சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி காலியாக இருப்பதை அறிவிக்க வேண்டிய அவசியமில்லை
ஷா ஆலாம்:
சிலாங்கூர் மாநிலத்தில் எந்தவொரு சட்டமன்ற உறுப்பினர்களின் சட்டமன்ற தொகுதிகளும் காலியானதாக அறிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று சிலாங்கூர் மாநில சட்டமன்ற சபாநாயகர் லாவ் வெங் சான் கூறினார்.
எந்தவொரு சட்டமன்ற உறுப்பினர்களும் அவர்களின் பதவிகளைத் தொடர முடியாத வகையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக கண்டறியப்படவில்லை என்று அவர் விளக்கம் அளித்தார்.
முன்னதாக, சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் திவாலானதாகவும் இதனால் அம்மாநிலத்தில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என்று ஆருடங்கள் வலுத்தன.
இந்த விவகாரம் குறித்து சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினரை அழைத்து விசாரணைநடத்தப்படும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி கூறியிருந்தார்.
இந்நிலையில், அந்த சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த திவால் உத்தரவை சிலாங்கூர் உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 13, 2026, 6:05 pm
சிங்கப்பூர் குப்பைகளை ஜொகூரில் கொட்டிய 9 நிறுவனங்களிடம் விசாரணை
August 13, 2026, 4:06 pm
ஜசெக தொடர்ந்து அரசாங்கத்தில் நீடிக்கும்: சைபுடின் நம்பிக்கை
August 13, 2026, 4:04 pm
எல்ஆர்டி ரயில் பயணி ஒருவர் மயங்கி தண்டவாளத்தில் விழுந்தார்: ரேப்பிட் கேஎல்
August 13, 2026, 3:54 pm
இந்தோனேசியாவில் மலேசிய விமானி கைது: வாக்குமூலம் பதிவு நடவடிக்கை நடந்து வருகிறது
August 13, 2026, 3:53 pm
