செய்திகள் மலேசியா
நான் எந்த விலங்கிற்கும் தீங்கு விளைவிக்க விரும்பவில்லை: ரோக்கியின் மரணத்துடன் தொடர்புடைய நபர் கூறுகிறார்
கிள்ளான்:
ரோக்கி என்ற வளர்ப்பு நாயின் மரணத்திற்கு வழிவகுத்த கிள்ளான் நாய் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நபர், ஜூலை 29 அன்று எந்த விலங்கிற்கும் தீங்கு விளைவிக்கும் அல்லது கொல்லும் நோக்கத்துடன் அந்த நடவடிக்கையில் ஈடுபட்டதை மறுத்துள்ளார்.
24 வயதான ஷா ஹிஸாம், ரோக்கியின் மரணத்தால் தானும் மனமுடைந்து போனதாகக் கூறினார்.
ஆனால் கிள்ளான் மாநகர் மன்றத்தால் தனக்கு வழங்கப்பட்ட கடமையை நிறைவேற்றுவதற்காக மட்டுமே அந்த நடவடிக்கையில் இருந்ததாகக் கூறினார்.
நான் அன்று இரவு எந்த விலங்கிற்கும் தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் அங்கு இருக்கவில்லை.
அதிலும் குறிப்பாக ரோக்கியை கொல்லும் நோக்கத்துடன் இருக்கவில்லை என்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் கூறினார்.
முன்னதாக ஷாவுக்கு மரண அச்சுறுத்தல்களை அனுப்பியவர்கள் அல்லது 24 வயதான அவரைப் பற்றி இணையத்தில் அவதூறு பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று அவரது வழக்கறிஞர் ரபிக் ரஷீத் அலி எச்சரித்துள்ளார்.
இணையத்தில் பதிவிடப்பட்ட அச்சுறுத்தும், அவதூறான கருத்துக்களை அவர்கள் ஆவணப்படுத்தி வருவதாகவும், மற்றவர்களைத் தூண்டிவிடும் தனிநபர்கள் மற்றும் செய்தி இணையதளங்கள் மீது வழக்குத் தொடரப்படலாம் என்றும் ரபிக் கூறினார்.
உள்ளூர் ரூகுன் தெதாங்காவால் எழுத்துப்பூர்வமாக அழைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஷா குடியிருப்பாளர்களின் பிரதிநிதியாக அந்த நடவடிக்கையில் ஈடுப்பட்டதாக என்று அந்த வழக்கறிஞர் கூறினார்.
அந்த நடவடிக்கையில் கலந்துகொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் நாய் பிடிக்கும் நடைமுறை குறித்து கிள்ளான் மாநகர் மன்றத்தால் விளக்கமளிக்கப்பட்டு, தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டன.
பயன்படுத்தப்பட்ட கழுத்து வளையம் ஷாவினுடையது அல்ல, அது கிள்ளான் மாநகர் மன்றத்தால் வழங்கப்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 13, 2026, 6:05 pm
சிங்கப்பூர் குப்பைகளை ஜொகூரில் கொட்டிய 9 நிறுவனங்களிடம் விசாரணை
August 13, 2026, 4:06 pm
ஜசெக தொடர்ந்து அரசாங்கத்தில் நீடிக்கும்: சைபுடின் நம்பிக்கை
August 13, 2026, 4:04 pm
எல்ஆர்டி ரயில் பயணி ஒருவர் மயங்கி தண்டவாளத்தில் விழுந்தார்: ரேப்பிட் கேஎல்
August 13, 2026, 3:54 pm
இந்தோனேசியாவில் மலேசிய விமானி கைது: வாக்குமூலம் பதிவு நடவடிக்கை நடந்து வருகிறது
August 13, 2026, 3:53 pm
