செய்திகள் மலேசியா
எல்ஆர்டி ரயில் பயணி ஒருவர் மயங்கி தண்டவாளத்தில் விழுந்தார்: ரேப்பிட் கேஎல்
கோம்பாக்:
இன்று காலை கோம்பாக் நிலையத்தில் நடந்த ஒரு சம்பவத்தில் எல்ஆர்டி ரயில் பயணி ஒருவர் தண்டவாளத்தில் விழுந்தார்.
அந்த நபர், தண்டவாளத்தில் விழுவதற்கு முன்பு மயங்கி விழுந்திருக்கலாம் என்று நம்பப்படுவதாக ரேப்பிட் கேஎல் இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியது.
இன்று காலை 9.05 மணிக்கு கோம்பாக் நிலையத்தில், ஒரு பயணி தண்டவாளத்தில் விழுவதற்கு முன்பு மயங்கி விழுந்திருக்கலாம் என்று நம்பப்படும் ஒரு சம்பவம் குறித்து ரேப்பிட் கேஎல் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறது.
சம்பவம் நடந்த உடனேயே, செயல்பாட்டுக் குழு மற்றும் காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக, பாதுகாப்பு நடவடிக்கையாக நடைமேடை ஊடுருவல் அவசரகால நிறுத்த அமைப்பு செயல்படுத்தப்பட்டு, தண்டவாளங்களுக்கான மின்சார விநியோகமும் தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டது.
சம்பவத்தில் சிக்கிய பயணி, ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருந்த நிலையில், தண்டவாளத்திலிருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்று அந்த அறிக்கை கூறியது.
அந்த அறிக்கையின்படி, பின்னர் அந்தப் பயணி பரிசோதனை, சிகிச்சைக்காக கோலாலம்பூர் தவாக்கல் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சம்பவத்தைத் தொடர்ந்து மேலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தண்டவாளங்கள் பாதுகாப்பானவை என உறுதிசெய்யப்பட்ட பின்னர், காலை 9.12 மணிக்கு ரயில் சேவை மீண்டும் தொடங்கியது என ரேப்பிட் கேஎல் கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 13, 2026, 6:05 pm
சிங்கப்பூர் குப்பைகளை ஜொகூரில் கொட்டிய 9 நிறுவனங்களிடம் விசாரணை
August 13, 2026, 4:06 pm
ஜசெக தொடர்ந்து அரசாங்கத்தில் நீடிக்கும்: சைபுடின் நம்பிக்கை
August 13, 2026, 3:54 pm
இந்தோனேசியாவில் மலேசிய விமானி கைது: வாக்குமூலம் பதிவு நடவடிக்கை நடந்து வருகிறது
August 13, 2026, 3:53 pm
