நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தோனேசியாவில் மலேசிய விமானி கைது: வாக்குமூலம் பதிவு நடவடிக்கை நடந்து வருகிறது 

சுபாங்: 

கடந்த ஜூலை 28ஆம் தேதி போதைப் பொருள் கடத்தியதாக சந்தேகிக்கப்படும் மலேசிய விமானி ஒருவர் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டார் 

கைது செய்யப்பட்ட விமானியிடம் வாக்குமூலம் பதிவு செய்யும் நடவடிக்கையை நடத்த புக்கிட் அமான் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அந்நாட்டிற்கு சென்றுள்ளனர். 

அங்குள்ள அமலாக்க தரப்பு அதிகாரிகள் வாக்குமூலத்தைப் பதிவு செய்ய இணக்கம் தெரிவித்த நிலையில் அந்த நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார். 

 விசாரணை ஆவணங்களை நிறைவு செய்வதற்காக, தற்போது விசாரணை செயல்முறை இன்னும் நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார். 

முன்னதாக 39 வயதுடைய மலேசிய விமானி ஒருவர் போதைப்பொருள் கடத்தியதாக சந்தேகத்தின் அடிப்படையில் இந்தோனேசியாவின் சொகார்னோ- ஹத்தா அனைத்துலக விமான நிலையத்தில் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 

மேலும் ஆய்வு செய்ததில், 25.19 கிலோகிராம் எடையுள்ள 70,114 எக்ஸ்டஸி மாத்திரைகள் அடங்கிய 14 பெரிய பொட்டலங்களும், அத்துடன் 2.75 கிராம் எடையுள்ள ஒரு ஷாபு பொட்டலமும், ஒரு கண்ணாடிக் குழாயில் 0.08 கிராம் எடையுள்ள ஷாபு எச்சமும் கண்டெடுக்கப்பட்டன.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset