செய்திகள் மலேசியா
ஜசெக தொடர்ந்து அரசாங்கத்தில் நீடிக்கும்: சைபுடின் நம்பிக்கை
கோலாலம்பூர்:
வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அக்கட்சியின் சிறப்பு மாநாட்டில், ஜசெக ஒற்றுமை அரசாங்கத்தில் தொடர்ந்து நீடிக்க முடிவெடுக்கும்.
நம்பிக்கை கூட்டணியின் பொதுச் செயலாளர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுதியோன் இஸ்மாயில் இந்த நம்பிக்கையை தெரிவித்தார்.
ஜசெக தேசிய நலன்களுக்கும் அரசாங்க நிலைத்தன்மைக்கும் முன்னுரிமை அளிக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்.
ஜசெக தலைமைக்கு, இந்த நாட்டில் நீண்டகாலமாக நிலைத்திருக்கும் ஒரு கட்சியின் ஞானம் இருப்பதாக நான் நம்புகிறேன்.
தற்போது மிகவும் சிறப்பாகச் சென்று கொண்டிருக்கும் தொடர்ச்சியைப் பாதுகாத்துத் தொடர்வதோடு, அரசியல் நிலைத்தன்மை அடிப்படையில் நாட்டின் நலன்களையும் டிஏபி நிச்சயமாக முன்னிறுத்தும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஶ்ரீ சைபுடின் நசுதியோன் கூறினார்.
இந்த ஞாயிற்றுக்கிழமை, மொத்தம் 4,264 ஜசெக பிரதிநிதிகள், நாடாளுமன்றத்தின் மீதமுள்ள பதவிக்காலத்திற்கு கட்சி அரசாங்கப் பதவிகளில் நீடிக்க வேண்டுமா அல்லது விலக வேண்டுமா என்பதை முடிவு செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 13, 2026, 6:05 pm
சிங்கப்பூர் குப்பைகளை ஜொகூரில் கொட்டிய 9 நிறுவனங்களிடம் விசாரணை
August 13, 2026, 4:04 pm
எல்ஆர்டி ரயில் பயணி ஒருவர் மயங்கி தண்டவாளத்தில் விழுந்தார்: ரேப்பிட் கேஎல்
August 13, 2026, 3:54 pm
இந்தோனேசியாவில் மலேசிய விமானி கைது: வாக்குமூலம் பதிவு நடவடிக்கை நடந்து வருகிறது
August 13, 2026, 3:53 pm
