செய்திகள் மலேசியா
சக இராணுவ வீரரை சுட்டதற்காக இராணுவ அதிகாரி மூன்று நாட்களுக்கு தடுத்து வைக்க உத்தரவு
போர்ட்டிக்சன்:
போர்ட்டிக்சன், சுங்கை மென்யாலாவில் உள்ள பகுதியில் துப்பாக்கி சுடும் பயிற்சித் தளத்தில் சக வீரர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படும் இராணுவ வீரர் மூன்று நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தத் தடுப்புக் காவல் கோரிக்கை மனு இன்று காலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது என நெகிரி செம்பிலான் மாநிலத் துணைப் போலீஸ் தலைவர் மூத்த உதவி ஆணையர் முகமட் நஷாருடின் முகமட் ஷெரிஃப் தெரிவித்துள்ளார்.
விசாரணையை முழுமையாக நிறைவு செய்வதற்காக 20 வயதிற்குட்பட்ட அந்தச் சந்தேக நபருக்கு இன்று முதல் ஆகஸ்ட் 15 வரை மூன்று நாட்களுக்குத் தடுப்புக் காவல் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
மேலும், காயமடைந்த 20 வயதிற்குட்பட்ட மற்றொரு இராணுவ வீரரின் தற்போதைய நிலை குறித்து முகமட் நஷாருடின் கருத்துத் தெரிவித்தார்.
அவர் தற்போது சிரம்பான் துவாங்கு ஜாஃபார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சீரான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவருக்குச் சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ பரிசோதனை அறிக்கைக்காகத் தற்போது காத்திருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுக் கூறினார்.
1960 ஆம் ஆண்டின் ஆயுதச் சட்டம் பிரிவு 37 மற்றும் தண்டனைச் சட்டக் கூறு பிரிவு 337 ஆகியவற்றின் கீழ் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகின்றது.
இந்த விபரீதச் சம்பவம் நிகழ்ந்ததற்கான உண்மையான காரணத்தைக் கண்டறியத் தொடர் விசாரணைகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
August 13, 2026, 6:05 pm
சிங்கப்பூர் குப்பைகளை ஜொகூரில் கொட்டிய 9 நிறுவனங்களிடம் விசாரணை
August 13, 2026, 4:06 pm
ஜசெக தொடர்ந்து அரசாங்கத்தில் நீடிக்கும்: சைபுடின் நம்பிக்கை
August 13, 2026, 4:04 pm
எல்ஆர்டி ரயில் பயணி ஒருவர் மயங்கி தண்டவாளத்தில் விழுந்தார்: ரேப்பிட் கேஎல்
August 13, 2026, 3:54 pm
