செய்திகள் மலேசியா
சங்காட் கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் விவகாரம்; கல்வி இலாகா விசாரணையை தொடங்கியது: டத்தோ சிவநேசன்
தஞ்சோங் ரம்புத்தான்:
சங்காட் கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி தொடர்பாக அண்மையில் வெளியான சில புகார்கள் குறித்து கல்வி இலாகா விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சம்பந்தப்பட்ட விவகாரத்தில் முறையான, விரைவான விசாரணை நடத்தி உரிய முடிவு எடுக்க வேண்டும் என கல்வி இலாகாவிற்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளதாக மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன் தெரிவித்தார்.
அப்பள்ளியில் ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றை சமூக ஊடகங்கள் அல்லது பொது தளங்களில் வெளியிடுவதற்கு பதிலாக, முறையான வழியில் கல்வி இலாகாவின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டும்.
பெற்றோர்-ஆசிரியர் சங்கம், பெற்றோர்களுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் இடையே பாலமாக செயல்பட வேண்டிய முக்கிய அமைப்பு என குறிப்பிட்ட அவர், மாணவர்களின் நலன் மற்றும் பள்ளியின் வளர்ச்சிக்கு அது முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்றார்.
தனிப்பட்ட பிரச்சினைகளை விடுத்து, மாணவர்களின் கல்வி, பள்ளியின் வளர்ச்சியை முன்னிலைப்படுத்தி அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் அனைவரின் விருப்பமாகும்.
தலைமை ஆசிரியர், ஆசிரியர்களும் எந்தத் தடையும் இல்லாமல் தங்களது கல்விப் பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று எங்களின் விருப்பம்.
இன்று இப்பள்ளிக்கு வருகை அளித்தப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.
முன்னதாக இப்பள்ளிக்கு வருகை அளித்த கல்வி இலாகா அதிகாரிகளுடன் சந்திப்பை நடத்தினார்.
இதில் இப்பள்ளியின் தலைமையாசிரியர் பெற்றோர் ஆசிரியர் சங்க பொறுப்பாளர்களுடன் சந்திப்பை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 13, 2026, 6:05 pm
சிங்கப்பூர் குப்பைகளை ஜொகூரில் கொட்டிய 9 நிறுவனங்களிடம் விசாரணை
August 13, 2026, 4:06 pm
ஜசெக தொடர்ந்து அரசாங்கத்தில் நீடிக்கும்: சைபுடின் நம்பிக்கை
August 13, 2026, 4:04 pm
எல்ஆர்டி ரயில் பயணி ஒருவர் மயங்கி தண்டவாளத்தில் விழுந்தார்: ரேப்பிட் கேஎல்
August 13, 2026, 3:54 pm
இந்தோனேசியாவில் மலேசிய விமானி கைது: வாக்குமூலம் பதிவு நடவடிக்கை நடந்து வருகிறது
August 13, 2026, 3:53 pm
